பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம்) விளக்கவுரையும் 249 நிகர்த்தலின், மகிழ்நன் மாண்குணம் வண்டுகொண்டன கோல் என்ருள். எனவே, பரத்தை தன் நலத்தைக் குறிப் பாற் சிறப்பித்துக் கூறினுளாயிற்று. தாதுண்ணும் வேட்கை யால், புதுப்பூ வென்முதல், பழம்பூவென்முதல் நோக்காது எல்லாப் பூவிலும் சென்று வண்டினம் ஊதுதல்போல, நலம் புதியளாய என்னேக் கூடலேயன்றி, முதியளாய தலைவியையும் கூடுகின்ருன் என்பாள், வண்டின் மாண்குணம் மகிழ்நன் கொண்டான்கொல் என்ருள். எனவே, தன் இளமையும், தலைவியின் முதுமையும் கூறினுளாயிற்று. வண்டினம் எல் லாப்பூவினும் ஊதும் என்பதனை, தாதுண் வேட்கையிற் போதுகெரிங் துரதா வண்டோ ரன்ன வவன் தண்டாக் காட்சி ' (நற். 25) என வருமாற்ரு லுணர்க. புதுநலம் கெழுமிய மகளிரையே நாடி இன்பதுகர்ச்சி யெய்தும் தலைவன் குணம், எல்லாப் பூவினும் ஒப்ப ஆதும் வண்டிற் கின்மையின், வண்டு கொண் டனகோல் என்றும், வண்டினம்போலத் தலைவன் இளேயரையும் முதியரையும் ஒப்பக் கூடுதலின், அஃ தவற்கு இயல்பன்று என்பதுபட, மகிழ்கன் கொண்டான்கோல் என்றும் கூறினுள்; புகன்ற வுள்ளமொடு புதுவோர் சாயற்கு அகன்ற கிழவன் ' (பொ. 147) என ஆசிரியர் தோல்காப்பியருைம், ஊரன் புதுவோர் மேவலன்' (ஐங் 17) என இந்நூலாசிரியரும் கூறியவாற். ருல், தலைவன் புதுகுலமகளிரையே நாடுமாறு அ றி க . அவனே, நெடுநீர்ப் பொய்கை நடுநா ளெய்தித், தண்கமழ் புதுமல ரூதும், வண்டென மொழிப மகனென்னரே ' (நற். 290) எனவரும் ஆசிரியர் மருதனிளநாகனுர் பாட்டும் இக் கருத்துக்கட்கு உபகாரமாதல் காண்க. இக் கூறியவாற்ருல், புதுநலமுடைய மகளிரைக் கூடி நெடிதிருத்தல் தலைவற்கு இயல்பாகவின், அதனைத் தலைவி யறிந்திலள் என்பாள், அன்னதாகலும் அறியாள் என்ருள். இளமைப்பருவங் கழியுங்காறும், அச் செயல் அவற் கு