பக்கம்:ஐங்குறு நூற்றுச் சொற்பொழிவுகள்.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தலைமை உரை

ஐங்குறுநூறு.

ஐங்குறுநூறு என்பது இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் இம் மதுரைமாநகரில் நிலவியிருந்த கடைச்சங்கத்தில் தமிழாராய்ச்சிசெய்து விளங்கிய கல் இசைப் புலவர் பல்லோரால் அவ்வப்போது பாடிய பாடல் களிலிருந்து தேர்ந்தெடுத்து அப் புலவர்களாலேயே தொகுத்த நூல்கள் எட்டனுள் ஒன்றாகும்.

இல் வெட்டுக் தொகை நூல்களை

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறு நநூறு ஒத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல் கற்றறிந்தார் ஏத்துங் கலியோ டகம்புறமென் து இத்திறத்த எட்டுத் தொகை.

என்னும் பழைய பாட்டொன்றால் அறியலாம். இவ்வெட்டு நூல்களுள்ளும் பதிற்றுப்புத்து, புறநானூறு என்னும் இரண்டு நூல்களுமே புறப்பொருள் பற்றியனவாகும். பரிபாடல்-கடவுள் வாழ்த்தொடு காமங்கண்ணி வந்தமை யால் அகமெனவும் அறமும் வீடுபேறும் கூறுதலால் புற மெனவும் படும். ஏனையவெல்லாம் அகப்பொருள் நூல்களாம்.

அகப்பொருளானது தலைவன் தலைவிகள அன்பின் அடியாகப் பிறந்த இன்பக் காதல் வாழ்க்கையைப்பற்றி விரித்துக் கூறுவதாம் தலைவன் தலைவிகளது அகத்தில் நிகழ்வதாய் அகமே உணர்ந்து நுகருந் தன்மைத்தாய் வெளிப்படையாக இன்ன படித்தென இயம்ப இயலாத தாய் இருக்கின்றமையின் இஃது அகப்பொருளெனப் பட்டது.

புறப்பொருளாவது மக்கள் அடைய வேண்டிய அறம் பொருள் என்பன பற்றிப் புறத்தே நிகழும் போர்ச் செயல், பொருளீட்டும் முயற்சி முதலிய செயல்களாம். மக்கள் வாழ்க்கையில் புறத்தே பிறர்க்குப் புலப்பட நிகழ்வ தாகலின், இது இப் பெயர் பெறுவதாயிற்று. வீடுபேறும் அதற்குரிய நோற்றலும் இதனுள் அடங்கும்.