பக்கம்:ஐந்திணை வளம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 ஐந்திணை வளம் கிடக்கின்றது. இரவுக்குத்துணையிருப்பதுபோலத்தலைவியும் தோழியும் ஒருவர் துயரத்தை ஒருவர் ஆற்ற முயன்றாராக அமர்ந்திருக்கின்றனர். அப்பொழுது கடலலைகள் கரைமேல் வந்து மோதுவதனால் எழுந்த ஆரவாரம், இரவின் அமைதியை ஊடறுத்துவந்து, அவர்கள் காதுகளிலும் விழுந்து கொண்டிருக்கிறது.அப்போது தலைவி கூறுகின்றாள். 'தோழி' 'நீலமணியைப் போன்ற நிறத்தையுடைய நெய்தற் பூக்கள் மலர்ந்திருக்கும் பெரிய உப்பங்கழிகளையுடைய கடல்நாட்டுத் தலைமகன், நம் தலைவன் அவன், நம்முடைய அழகாகிய நலத்தினை உண்டுவிட்டு,நம்மை விட்டுப்பிரிந்தும்போயினான். அதனால், நாம் துஞ்சாதே கிடந்து துயருற்றுப் புலம்புகின்றோம். செறிந்த மணல்மேடுகளில் அலைகள் மோதி நடக்கும்படியாகத் துணியப்பட்ட கடலும்,துஞ்சாது இப்படி ஆரவாரித்துப்புலம்புவது ஏன்? 'நம் சேர்ப்பன் அதன் அழகு நலத்தையும் உண்டபின், அதனையும் கைவிட்டுப்பிரிந்துபோயினானோ? அதனாற்றான் அதுவும் துஞ்சாதிருக்கிறதோ? தலைவியது ஏக்கச் சுமையின் அழுத்தம் இப்படி வெளி வருகின்றது. - மனநிற நெய்தல் இருங்கழிச் சேர்ப்பன் அணிநலம் உண்டகன்றான் என்றுகொல் எம்போல் திணிமணல் எக்கர்மேல் ஓதம் பெயரத் துணிமுந்நீர் துஞ்சா தது. ‘மணிநிற நெய்தல் இருங்கழிச் சேர்ப்பன்' என்பதை நன்றாகச் சிந்தித்தல் வேண்டும். 'கண்போல் விளங்கும் அதனையுடைய சேர்ப்பன்,தன் கண்களின்கலங்கியநிலையினை நினைத்தானில்லையே' என்று வருந்தியது இது. 5. உணர்வு இலாதேன் தலைமகன் வெகு நாட்களாகவே தலைவியை வந்து சந்தியாமல் இருந்துவிட்டான். அதற்குத் தடுக்க முடியாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/110&oldid=761791" இலிருந்து மீள்விக்கப்பட்டது