பக்கம்:ஐந்திணை வளம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - 21 இல்லறம் நிகழ்த்துவதற்கு முயலுதல் வேண்டாவோ?’ என்ற அறிவுரையினையே தோழிநயமாக உரைக்கின்றாள். "தலைவனே! இவளை மறந்துவிடாதே விளங்குகின்ற அணிகளை உடையாளான இவளுக்கு, நின்னை அல்லாமல் வேறு துணைசெய்வார் யாரும் இலர்.நின் கண்ணோட்டத்தால் தன்னுடைய இனிய உயிரைத் தாங்கியிருப்பவள் இவள். இவள், நின் பிரிவைத் தாளாது படுகின்ற வேதனையைக் கருதிப் பார்ப்பாயாக. அதனைத் தீர்க்கும் மருந்தாகிய திருமன்னத்தையும் இவளுக்குத் தருவாயாக" என்று மேலும் சொல்லுகின்றாள் தோழி. தலைவனும் தோழியின் சொற்களால் தலைவியது லையினை உணர்கின்றான். தன்னுடைய பொறுப்பினையும் ற இl Ա/ Ակ னைக்கின்றான். அவன் உள்ளமும் உறுதிகொள்ளுகின்றது. ற மும உறு |ளளு 'நீ கவலையுறல் வேண்டா, யான் அதனை விரைவிலேயே மேற்கொள்வேன்' என்று தோழிக்கு உறுதிகூறித் தலைவனும் செல்லுகின்றான். தோழிக்குத் தலைவியிடம் விளங்கிய அன்பின் மிகுதியைக் காண்கின்றார் மூவாதியர். அவர் மனம் அந்த அன்புச்செறிவினைப் போற்றுகின்றது. பொன்னினர் வேங்கை கமழும் நளிசோலை நன்மலை நாட! மறவல் வயங்கிழைக்கு நின்னல தில்லையால் ஈயாயோ கண்ணோட்டத்து இன்னுயிர் தாங்கும் மருந்து. நளி-குளிச்சி கண்ணோட்டம்-அருளுதல் 'மறவல்; வயங்கிழைக்கு நின்னலது இல்லையால்; கண்ணோட்டத்து இன்னுயிர்தாங்கும் மருந்து ஈயாயோ? என்று வேண்டிநிற்கும் தோழியின் அன்புச் செறிவினை நாமும் போற்றுதல் வேண்டும். தலைவனும் தலைவியும் இயற்கைத் தூண்டுதலின் வசமாகி நிற்கின்றனர். அவர்களுடைய பெற்றோர்களோ சமூகத்தின் கட்டு திட்டங்களை மதிப்பவர்கள். இவர்களுக் கிடையில், அந்த இரண்டு ஜோடிகளையும் இணைத்து உதவும் பாலமாக விளங்குகின்றாள் தோழி. தலைவியது இன்ப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/29&oldid=761828" இலிருந்து மீள்விக்கப்பட்டது