பக்கம்:ஐந்திணை வளம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - 25 தெளிந்த நீர் துளும்பும்படியாக அதனுள் வீழும். இத்தகைய நறுமணமிக்க குளிர்ந்த சோலைகள் விளங்கும் நாட்டிற்குரிய தலைவனே! என்று விளிக்கின்றள் தோழி. 'தோழி! நின் வருணனை மிகவும் நன்று. ஆயின் எதற்காக இவ்வளவு பெரிய அடிப்படை?சொல்ல விரும்புவதை நேராகவே கூறலாமே? என்கின்றான் தலைவன். தோழி அவனைச் சிந்திக்க விட்டுவிட்டுத் தான் மெளனத்தை மேற்கொள்ளுகின்றாள். 'வெறிகமழ்தண்சுனைத்தெண்ணிர் போன்று விளங்கிய தலைவியது குடும்பத்திலே, தன்னுடைய களவு உறவான செயல், செயலளவில் தேமாங்கனிபோல இனிமையுடையதே யானாலும், வீழ்ந்த வேகத்தால் கலக்கத்தை ஏற்படுத்தியது என உரைக்கின்றாளோ இவள்? தங்களின் உறவினை அவர்கள் அறிந்திருப்பார்களோ? இப்படியெல்லாம் தலைவனின் நினைவோட்டம்செல்லுகின்றது; அவன்திகைப்படைகின்றான். எதுவும் தோன்றாதவனே போலத் தோழியை நோக்குகின்றான். "அறிவினிடத்தாகநிலைபெற்றமடமை என்பதும் ஒன்று உளதோ?” என்று, அவனைக் கேட்கின்றாள் தோழி. மடமை அறிவிடத்தே இருப்பதாவது? அறிவு என்பதே மடமை நீங்கிய தெளிவுதானே? தலைவன் மீளவும் சிந்தனையிலே ஆழ்கின்றான். "நீயோ அறிவுடையவன், இந்தக் களவினால் வருகின்ற அலரினையும், அதனால் ஏற்படும் துயரங்களையும் அறியக் கூடியவன், இருந்தும், அறியாதவனே போலச் செயலற்று இருப்பதென்றால், அறிவுடையானாகிய நின்னிடத்தேயும் மடமை நிலைநிற்கின்றது என்பதுதானே பொருள். தோழி விளக்குகின்றாள். தலைவன் தன்னை உணர்கின்றான். 'விரைவிலே வேண்டியன செய்வேன்’ என்று உறுதி கூறிப் போகின்றான். தோழியின் இந்த நுட்பமான பேச்சு, மூவாதியரால் வெண்பாவாக மலர்ந்து, நமக்கு விருந்து நல்குகின்றது. - வெறிகமழ் தண்சுனைத் தெண்ணி துளும்பக் கறிவளர் தேமா நறுங்கனி வீழும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/33&oldid=761833" இலிருந்து மீள்விக்கப்பட்டது