பக்கம்:ஐந்திணை வளம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 ஐந்திணை வளம் வாழைக் காயைப் புதைத்த கடுவன், புதைத்த இடந் தெரியாது அயர்வது போலத், தானும் வாழ்க்கைத் துணைமை யினைக் கருதிக்கொண்ட களவு உறவினை முறையாக மேற்கொள்ள வியலாமல் தளர்ந்துவிட்ட தன்மையினையும் அறிகின்றான். தான் தெறிவித்த சொற்கள் அம்புகளாகத் தலைவியின் நெஞ்சிலே ஊன்றின என்றதனால், தான் சொற்பிறழ்ந்த காரணத்தால், அச் சொற்களையே எண்ணி எண்ணி மனம் புண்பட்டு வருந்தி நலிகின்ற தலைவியது நிலையையும் புரிந்து கொள்ளுகின்றான். - அரியதான அந்தப் பேச்சினை அழகான செய்யுளாக ஒவியப்படுத்தி உதவுகின்றார் மூவாதியர். கேழல் உழுத களிபுனக் கொல்லையுள் வாழை முதுகாய் கடுவன் புதைத்தயரும் தாழருவி நாடன் தெளிகொடுத்தான் என்தோழி நேர்வளை நெஞ்சூன்று கோல். தலைமகன் வரைவினை நீட்டித்தவிடத்து, அவனுடைய ஏலாமையைச் சுட்டி இப்படிப்பழிக்கின்றாள் தோழி. கேழல்=பன்றி, கடுவன்-ஆண் குரங்கு கோல் அம்பு 12. ஏமாப்பு உடையது தோழி உரைத்த சொற்களைக் கேட்டதும், தலைவியின் உள்ளம் வேதனை கொள்ளுகின்றது. தான் அவன்பாற் கொண்ட நம்பிக்கையின் உறுதியையும், அவன் சொன்ன சொற்களைப் பொய்க்காத வாய்மையாளன் என்பதனையும், தோழிக்குச் சொல்ல நினைக்கின்றாள். - தோழியின் பழிச்சொற்கள் காரணமற்று எழவில்லை என்பதனை அவள் அறிவாள். ஆகவே, தலைவன்பால் தவறில்லை என்று கூற முற்படாது, அது தனக்குப் பாதுகாவலான ஓர் உறவு என்று வற்புறுத்தவும் முயல்கின்றாள். தலைவியின் இந்த உரையினையும், தலைவன் வேலிப் புறத்தே நின்றபடியேகேட்டிருக்கின்றான். 'தோழி! பெரிய கையினையுடைய கரிய களிற்று யானையானது மலை நெல்லைத் தின்றுவிட்டுக், கரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/38&oldid=761838" இலிருந்து மீள்விக்கப்பட்டது