பக்கம்:ஐந்திணை வளம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 - ஐந்திணை வளம் துன்புற்று வருந்தியிருக்கும் தலைவியின் உள்ளத்தை இன்பவூற்றாகிய அந்த இசை வெள்ளத்தின்பால் ஈடுபடுத்தி, அதன் மூலம் சிறிதளவேனும் மாற்றுவதற்கு நினைக்கின்றாள் தோழி. "தோழி! கொன்றைக் குழலினை ஊதிக்கொண்டு கோவலர்கள் வருகின்றனர். அந்த இசையினது இனிமையைக் கேட்டுமுன்னெல்லாம்நாம் எவ்வளவு இன்புறுவோம்? அதனை மறந்துவிட்டாயா? அதோ அந்த இசைநாதம் நின்துயருக்கு மருந்தாகவந்து கொண்டிருக்கிறது என்று கூறுகின்றாள். கொன்றைக் குழலின் இசை இனிதுதான். ஆனால் காதலன் அருகிலே இல்லையாகவே, அந்த இனிமையும் அவளுக்கு எரியாகத் தோன்றுகின்றது. . "தோழி, கோவலர்கள் கொன்றைக் குழலினை ஊதியவராகப் பின்னே நிரைத்து நிற்கக், கன்றை விரும்புகின்ற ஆநிரையாகிய கூட்டங்கள் ஊர்க்கண்ணே புகுந்து செல்லுகின்றன. அங்ங்னமாக, இன்று தன்னுடைய ஆட்சியை இவ்விடத்தே நிகழ்த்துதற்கு வேண்டிமாலைக்காலமும் வந்தது. 'வானத்தே மேகங்களும் யாம் காணுமாறு இடிமுழக்கி யவையாய்த் தோன்றுகின்றன. மழையும் வில்லைக் கோலி வளைத்துப் பெய்யத் தொடங்கிற்று. 'இந்நிலையில் வருவேம் என்றவர் வராததனால் யான் படும் வேதனைதானேடி மிகுதியாகின்றது” என்கின்றாள் தலைவி. கொன்றைக் குழலூதிக் கோவலர் பின்னிரைத்து, கன்றமர் ஆயம் புகுதர-இன்று வழங்கிய வந்தன்று மாலையாங் காண 茨 முழங்கிவிற் கோலிற்று வான். ‘யாம் காண என்ற சொற்களுள், இழைந்தோடுகின்ற துயரத்தின் செறிவினை நாம் உணர்தல் வேண்டும். தான் இறந்து படாமல் இருந்து காணவும் நேருமாறு என்று அவள் சொல்லுகின்றாள். கொன்றைக்குழல்-கொன்றைப்பழத்தினைத் குடைந்து. துளையிட்டுச் செய்த ஊதும் குழல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/52&oldid=761854" இலிருந்து மீள்விக்கப்பட்டது