பக்கம்:ஐந்து செல்வங்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
9

நன்கு விளங்குகிறது. பெற்ற தாயின் பெருமையை, அவள் தன் உள்ளக் கிடக்கையை நன்கு விளக்க வள்ளுவர் கையாண்ட இம்முறை வியக்கத் தகுந்ததும், மகிழ்ச்சிக்குரியதுமாகும்.

இராவ்பகதூர் ப. சம்பந்த முதலியார் அவர்கள். “மனோகரன்” என ஒரு நாடகத்தை எழுதியிருக்கிறார். அந்த நாடகத்தின் உயிரோட்டமெல்லாம் ஒன்றே ஒன்று தான். அது,

“தன்னைப் பழித்தவன் தந்தையா யிருந்தாலும் விடாதே!

ஆனால், தாய் தடுத்தால் விட்டுவிடு” என்பதேயாம்.

தாய்ச் செல்வத்தின் பெருமையை அந்நாடகம் மக்களுக்கு நன்கு அறிவிக்கிறது. அக்கதையை எழுதுவதற்கென்றே பிறந்தவர் சம்பந்த முதலியார் என்பதும், மனோகரனாக நடிப்பதற்காகவே பிறந்தவர்கள் டி. கே. சண்முகமும், கே. ஆர். இராமசாமியும் என்பதும், அந்த நாடகத்தைப் பார்த்து மகிழ்வதற்காகவே பிறந்தவர்கள் நம் போன்றவர்கள் என்பதும், அந்த நாடகத்தைப் பார்த்துத் திருந்துவதற்காகப் பிறந்தவர்கள் பெற்ற தாயைப் புறக்கணிக்கும் மக்கள் என்பதும் நமது கருத்து.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் ஒரு கவிதை புனைந்திருக்கிறார் அக்கவிதை மனோகரன் கதையை ஒரு படி அதிகமாகத் தாண்டியிருக்கிறது. அது,

“தன்னைப் பழித்தவனைத் தாய் தடுத்தால் விட்டுவிடு தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாதே!”

என்பதாகும். இவ் வுறுமொழியை ஒவ்வொரு தமிழனும் கூற வேண்டுமென்பது நமது விருப்பம். கவிஞர், “தாய் தடுத்தால்’’ எனக் கூறுவதிலிருந்து, ஒரு வீர மகனைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் எத்தகைய வீரனுக்கும் இல்லையென்பதும், பெற்ற தாய் ஒருத்திக்கே உண்டு என்பதும்