பக்கம்:ஐந்து செல்வங்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



23


கண் : பாட்டி! வருந்தத்தக்க இச்செய்தி என் உள்ளத்தை வருத்துகிறது என்றாலும், ‘கோடானு கோடிப் பேர் மிக எளிதாகக் கருதிப் பேசிவருகிற பொய்யை, மிகப் பெரிதாகக் கருதி வாழ்ந்து வந்தது நம் குடும்பம்’ என்று எண்ணும்போது, அதைவிட அதிகமாக மகிழ்ச்சி உண்டாகிறது பாட்டி?

பாட்டி : கண்ணு! இச்சிறிய வயதிலே உனக்குப் பரந்த நோக்கமும், விரிந்த மனப்பான்மையும் அமைந்திருப்பதைக் கண்டு என் உள்ளம் குளிர்ச்சியடைகிறது. கண்ணம்மா! நீ நன்றாக இருத்தல் வேண்டும்!

கண் : உங்கள் வாழ்த்துதல் பொய்க்காது பாட்டி! செல்லத்தின் தாயும், என் தாயைப்போலச் சிறு பொய் சொல்லியிருக்கக்கூடும். அதற்குச் செல்லம் குற்றவாளியானால், நானும் குற்றவாளிதானே பாட்டி!

பாட்டி : அப்படியல்ல...கண்ணு கொலுப் பொம்மைகளை விற்கக் கூடையோடு ஒருத்தி வந்தாள். செல்லத்தின் தாய் 4 பொம்மைகளை விலைபேசி எடுத்துக்கொண்டு பணம் கொடுத்துவிட்டாள். செல்லம் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இன்னும் சிறுபிள்ளைதானே! அப்பொழுது அவளுக்கு 8 வயது இருக்கும். பொம்மை ஒன்றைப் பொம்மைக்காரி அறியாமல் எடுத்துப்போய் அவள் தாயாரிடம் கொடுத்துவிட்டாள். கடைசியாகப் பொம்மை ஒன்று குறைவதைக் கண்ட பொம்மைக்காரி, செல்லத்தின் தாயைக் கேட்டாள். செல்லம் பொம்மையை எடுக்கவுமில்லை, தன்னிடம் கொடுக்கவுமில்லையென்று பொய் கூறிவிட்டாள்.

கண் : இது எப்படி உங்களுக்குத் தெரியும்?

பாட்டி : மறுநாள் பொம்மைக்காரி கொலுப் பார்க்கும் கூட்டத்தோடு கூட்டமாகச் செல்லத்தின் வீட்டிற்குப் போனாள் அங்கு அந்த ஐந்தாவது பொம்மையைப் பார்த்து விட்டாள். அவள், அங்கேயே உட்கார்ந்து கொண்டு கொலுப்பார்க்க வருகிறவர்கள் எல்லோரிடமும் இக்கதையைச் சொல்லிக் கொண்டிருந்தாள். செல்லத்தின் தந்தை வெளியிற் சென்றிருந்து வந்தவர்,