பக்கம்:ஐயை.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயை-2-ஆம் பகுதி

"பெண்ணுெருத்தி தானே முன் வந்து சொன்னல்

பேரன்பும் பிழைபட்ட தாமோ காதல்

பண்ணுெருத்தி முன்னிசைத்து விட்டா ளென்றல்

பண் கெட்டுப் போய்விடுமோ? பறந்து சென்றே

விண்ளுெருத்தி ஆய்ந்துவரும் இக்கா லத்தில்

வெளிப்படையாய் ஒருத்திவந்து காதல் பேசில்

கண்ணுறுத்திப் பார்த்துலகம் பழித்தல் நன்ருே?

கணித்திருக்க வேண்டும், அன்னை-'எனநி இனத்தான் !!

நினைத்தபடி நாளுமவள் வந்து நிற்கும்

நிழல்செறிந்த மரத்தினடி நின்று பார்த்தான்!

சினைத்தலர்ந்த முல்லையினைச் சுமந்து நிற்கும்

செழுங்கூந்தல் நிலவுமுகம் காண வில்லை!

"எனத் தளர்த்தி விட்டாளோ? அன்னை சொல்லால்

இனி மறந்து விடுவாளோ?’ என்றே எண்ணி

முனைத்தகன்று செல்வானின் தோள்மேல் ஒர்கை

மொத்தென்று விழத்திரும்பச் சோழன் நின்ருன்1 12

சோழனவன் கல்லூரித் தோழன்; நல்ல

சொலல்வல்லன்; தமிழ்மன்றச் செயலன்;ஆளுல் ஏழையவன்; கல்வியிலே எடுப்பாய் நிற்போன்.

"ஏன்..சேராl யாரையிங்குப் பார்த்து நின்ருய்? தாழைமலர்ச் சிரிப்பொருத்தி விசு வாளே

தளிர்க்கொடியாள் அவளையா?'-வென் றன்பாய்க்

(கேட்டான்! வாழையிலே கிழிந்ததுபோல் மென்மை உள்ளம்

வாய்ந்திருந்த சேரன்மனம் கிழிந்த தங்கே! 13

76

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/146&oldid=1273607" இலிருந்து மீள்விக்கப்பட்டது