பக்கம்:ஐயை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயை-2-ஆம் பகுதி

'அகல் உலகில் அவர் வெறுத்தால்

ஆரெனக்குத் துணையாம்! அத்தையுள ரா,எனக் குப்

பரிந்தவர்.பால் பேச? புகல் எனக்கிங் கவர் தாமே !

புனைந்துகொளக் கேட்பேன்; புலம்பவிட்டால் உயிர்துறந்து

போவதுதான் நன்று! இகலெனக்கு வாராமல்

இறைவனெனக் காப்பார்! இதுவரைக்கும் துயர்ப்பட்டேன்;

இனியொருகால் நீங்கும்! பகலிரவும் போல்தாமே

இன்பதுன்ப மெல்லாம்! பட்டதெல்லாம் துயரிaவே;

பகலினித்தான் இருக்கும்'

-எனப்பலவா றெண்ணியவள்

இமைநனைந்தாள்; என்றும் இல்லாத நம்பிக்கை

பிற்ந்ததவட் கின்று! மனப்பொறையும் குறைந்தவுடன்

மகிழ்வமைதி கொண்டாள்! மலர்விழியை விடியலிலே

மருவியது துரக்கம்!

18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/88&oldid=1273549" இலிருந்து மீள்விக்கப்பட்டது