பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

படை திரட்டிக் கொண்டு வந்து மறுபடியும் மறுபடியும் தங்களது புராதனத் தலைநகரைக் கைவசமாக்கிக் கொண்டுள்ளார்கள் என்று தோன்றுகிறது.

பஞ்ச பாண்டியர் — பெயர்க்காரணம்

இனி 'பஞ்சபாண்டியர்,' 'ஐவர் ராசாக்கள்' என்ற தொடர் எப்பொழுது தோன்றியது என்று காண்போம். 'கௌரியார்' 'பஞ்சவர்' என்ற பெயர்கள் 7ம் நூற்றாண்டிற்கு முன்னரே பாண்டியர்களுக்கு வழங்கிய பெயர்களாகத் தோன்றுகிறது. அவர்கள் தம்மை சந்திர குலத்தவர் என்று கருதிக் கொண்டதும் அருச்சுனனோடு தம் குலப்பெண் ஒருத்தி மண உறவு கொண்டதாக மகாபாரதம் கூறுவதைக் கொண்டும் இப்பெயர்களை அவர்கள் மேற் கொண்டனர் என்று கருதலாம். ஆனால் இச்சொற்களும் 'ஐந்து' என்ற பொருள் இருந்ததாகத் தெரியவில்லை.

'ஐந்து மன்னர்கள்' என்ற பொருளில் முதன் முதலில் முதலாவது குலோத்துங்க சோழன் சாசன மொன்றில் பாண்டியர்கள் குறிப்பிடப்படுகிறார்கள். ஐந்து பாண்டிய மன்னர்களை ஒரு போரில் வென்றதாக அச்சாசனத்தில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து கே. ஏ. நீலகண்ட சாஸ்திரியார், “ஐந்து பாண்டியர்களுக்குள் நாட்டைப் பாகுபாடு செய்து கொண்டு, அவர்களுள் ஒருவனைத் தலைவனாகவும் முடிமன்னனாகவும் ஒப்புக் கொண்டு நாட்டைப் பரிபாலனம் செய்துவந்த முறை பல காலமாக வழக்கத்திலிருந்தது“ என்று கூறுகிறார்.

முதலாம் ராஜேந்திரனுடைய காலத்தில் மதுரையை இழந்த பாண்டியர்கள், குலோத்துங்கன் காலத்திற்குள்ளாக ஐந்து சிற்றரசுகளை நிறுவி, ஒரு முடி மன்னனையும் தமக்குள் ஏற்படுத்திக் கொண்டார்கள் என்று முடிவுக்கு வருவது தவறல்ல.

பாண்டியர் ஏற்றம்

இவர்களனைவரும் சோழர் ஆட்சி வலிமை குன்றிய காலத்தில் ஒன்றுபட்டு தமது தலைவனை ஆதரித்து நின்றதால் பாண்டியர் வலிமை பெருகி தமது ஆட்சி நிலத்தை வடக்கு நோக்கி விஸ்தரித்துக் கொண்டார்கள். அக்காலத்தில் தான் சந்திர பாண்டியன் (I) ராஜராஜனை (III)த் தோற்கடித்து சோழ சாம்ராஜ்யம் முழு-