பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 6 50 1666 1670 89 புது வயிரச் சங்கிலியும், பூங்கமுகும் சங்கும் ஒத்த பொற்கமலக் கழுத்தினிலே ஒத்த மணித் தாலிச் சங்கு உட்கட்டு ஒற்றை வட மணிந்தாள் காதில் தங்க மணியு மிட்டாள் கைக் கடய மணிக் கொப்பு மிட்டாள் காதிலங்கு குமிழ் மூக்கில் தரளமணி நாசியிட்டாள். செம்பகள வாயிலிட்ட சிறந்த முத்தின் பல்லொளியும் அருமையுள்ள வேல் விழிக்கு அழகு பெற மையெழுதி மன்மத வேள் பெருகிடவே மணி நுதலில் திலகமிட்டாள் பொன் மருவும் திரு வணிந்தாள். பூம்பாளை தானணிந்தாள் மஞ்சனைய கூந்தலுக்கு மயில் செண்பகம் சூட்டினளே அஞ்சனக் கொண்டையின் கீழ் அழகோடமைந்த ஸ்தனத்தாள் தென்ன, தென்னு வென்னமணி சிலம்பு கொஞ்சத் தான் நடந்தாள். மன்னவளுர் முன்பினிலே வந்தாளே பாடும்பரசி வந்த போதந்த மந்திரிமார் மன்னவனேடு என்ன சொல்வார் ? பைந் தொடியாள் சங்கீதம் பாட்டினுட கம்பீரமும் சிந்தையுறக் கேட்டருள்வாய் தென்னவனே' எனத் தொழுதார் மந்திரிமார் சொன்னபோதே மங்கை நல்லாள் பெண் கொடியாள் எண்திசையும் தேவர்களும் இந்திரனும் மால் கொள்ளவே 1851 நாசி-மூக்கில் அணியும் அணியெனத் தோன் 1652 பகளம்-பவளம் (பேச்சு வழக்கு-நெல்லை ந 1660 மஞ்சு-மேகத்திரள் (நெல்லை வழக்கு) 1677 மால்-காம மயக்கு. -