பக்கம்:ஒத்தை வீடு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

VIII ரசிக்க ஆரம்பிக்கும்போது, நமக்கு ஏற்படுகிற பதைபதைப்பு அவன் அந்த செயலில் ஈடுபட்டு, அதை உணர்ந்து வேதனைப்படும்போது, நமக்குள் கசிகிற ரத்தக்கண்ணிர், அவன் அந்தப் பிரச்சினையிலிருந்து விடுபடும்போது, நமக்கு ஏற்படுகிற ஒரு நிம்மதி - நாவலின் உயிரோட்டத்துக்கு இந்த உணர்வுகளே சாட்சி. சமூக அக்கறை சு. சமுத்திரம், நுனிப்புல் மேய்பவர் அல்ல என்பதற்கு, இந்த நூல் மற்றொரு எடுத்துக்காட்டு. தன்னினச்சேர்க்கையில் ஈடுபட எந்தச் சூழ்நிலைகள் காரணம், அதிலிருந்து விடுபட பாதிக்கப் பட்டவனும், அவனைச் சேர்ந்தவர்களும் எப்படி செயல்பட வேண்டும் என்பதையெல்லாம் விளக்கமாகக் சித்தரித்திருப்பது சமுத்திரம் அவர்களின், சமூக அக்கறைக்கு சான்றாக விளங்குகின்றது. வழக்கப்படி சமுத்திரம் அவர்களின் நையாண்டிக்கும் இந்த நூலில் நிறைய இடமிருக்கிறது. சில உதாரணங்கள்: "கட்டிடப் பிளானை தலைகீழாகப் பார்த்த கார்ப்பரேஷன் கிளார்க்" "அவர் எண்ணம் சம்ப்பில் விழாத, கார்ப்பரேஷன் தண்ணீர்போல் ஆனது." "இந்தக் கவிஞர்களின் கவிதைகளையே திருடி, அங்குமிங்குமாய் மாற்றி, அசல் சினிமாக் கவிஞனாய் ஆகிவிடலாம்." "அய்யகோ - இது அவன் தந்தை, கலைஞரின் தாக்கத்தால் அடிக்கடி சொல்லும் வார்த்தை, "குழந்தைகளை யூனிபாரமாகக் கூட்டி வந்தான்.” "செல்வம் என்றால் மரபுக்கவிதை செல்வா என்றால் புதுக்கவிதை." இப்படி நூல் முழுக்கப் பரவிக் கிடக்கும் மாறுபட்ட பார்வைகள். ராமனும் லட்சுமணனும் வெவ்வேறு தாய்க்குப் பிறந்தவர்கள். அதனால்தான், பாசமாக இருக்க முடிந்தது. ஒரே தாய்க்குப் பிறந்த பிள்ளைகள் பங்காளிகளாக மாறும்போது, பாசம் போய்விடுகிறது. அடுத்த பிறவியில் ஐந்து கணவர்களுக்கு மனைவியாக வேண்டும் என்று தவமிருந்து திரெளபதியாகப் பிறந்த நளாயினியும், ராவணன் படத்தை வரைந்து, அவனை நினைத்த சீதையும், மைத்துனன் சுக்ரீவனோடு, காம விளையாட்டு நடத்திய, வாலியின் மனைவி தாராவும், கணவனின் செயல் சரியில்லை என்று வாதிட்ட மண்டோதரியும், பஞ்ச பத்தினிகள் என்று கொண்டாடப்படுகிறார்கள். மண்டோதரியைத் தவிர, மற்ற நால்வருமே கற்பில் சந்தேகத்துக்குரியவர்கள் என்றாலும், இவர்களை பத்தினி என்கிறது மதம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/10&oldid=762150" இலிருந்து மீள்விக்கப்பட்டது