பக்கம்:ஒத்தை வீடு.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 99 இந்த சொர்ணம்மா அவர்கள் வந்ததும் பயந்து போனவள்தான். போலீஸ்ல பிடிச்சுக் கொடுத்திடாதீங்கன்னு கெஞ்சப் போனவள்தான். ஆனால் சம்பந்திகள் என் மகள் தெரிஞ்சும் தெரியாம ஏதாவது செய்திருந்தால், நீங்கதான் பெரிய மனசு பண்ணி மன்னிக்கனும்: என்று அழுதபோது, அவளது பயம், பயமுறுத்தலானது. கடந்த மூன்று நாட்களில் அவள் எகிறல் மூன்று மடங்காகி, முப்பரிமாணம் பெற்றது. மனோகர் பின்னால் நிற்பதை அந்த நால்வருமே கவனிக்கவில்லை. நாயகியான சொர்ணம்மா, சுடச்சுடக் கொடுத்தாள். "இன்னியோட எங்க பொறுப்புத் தொலைஞ்சது. நீங்க ஆயிரம் சொன்னாலும் கேட்கப் போறதாய் இல்லை. இனிமேல் நீங்க யாரோ. நாங்க யாரோ. ஊருக்குக் கூட்டிப் போகணுமுன்னாலும் கூட்டிப் போங்க. இங்கேயே வச்சு அழகு பார்க்கணுமுன்னாலும் பாருங்க. ஏய். காந்தாமணி. புறப்படு-" "அண்ணி! அப்படியெல்லாம், பேசாதீங்க... நாங்க எந்த முகத்தோட அவளக் கூட்டிட்டுப் போவோம்.” 'சும்மாச் சும்மா பினாத்தாதே. எங்கேயாவது- பெண்டாட்டி, புருஷன அடிப்பாளா..? இவள் அடிச்சிட்டாளே. இவளைச் சேர்த்தால். ஒருநாள் ராத்திரியிலே என் மகனைக் கொலை செய்ய மாட்டாள் என்கிறதுக்கு என்ன நிச்சயம்?" "எம்மா.. என்ன இதுல்லாம்." மனோகர், ஓங்கிக் கத்தினான். நால்வரும் திரும்பினார்கள். கண்களில் நீர் கோர்த்த மாமியாரையும், யோகி போல் கைகட்டி நின்ற மாமனாரையும் மாறி மாறிப் பார்த்தான். மாமியார் அவனைப் பார்த்துவிட்டு, இயல்பிலேயே ஒடுங்கிப்போன உடம்பை ஒடுக்கினாள். மாமனார், அவன் கையைப் பிடித்து தேக்கி வைத்த உணர்வுகளைத் திரவமாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். இருவரும் ஆரம்பப் பள்ளிக்கூட ஆசிரியர்கள். குழந்தைகளோடுப் பழகிப் பழகி குழந்தையானவர்கள். மாமியார், மருமகனைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டாள். அம்மாவைப் போல் அவன் திட்டி விடக்கூடாதே என்கிற பயம். அவள் உடம்பு ஆடியது. சரணாகதியாய் ஆடியது. கும்பிட்ட கையை எடுக்காமலே மருமகனைப் பார்த்து மன்றாடினாள். "அவள் நடந்துக்கிட்டது தப்புத்தான் மாப்பிள்ளே. எங்க குடியைக் கெடுக்கிறதுக்கின்னே பிறந்திருக்காள். ஒரே பெண்ணாச்சேன்னு தலையிலே தட்டி வளர்க்காமப் போயிட்டோம். எங்க வீட்ல இருந்தது மாதிரியே ஒங்க வீட்லயும் இருப்பான்னு நினைத்தோம். இப்படி ஒங்களைச் சீரழிப்பான்னு நினைக்கலே. ஏங்கி ஏங்கி அழுகிறா மாப்பிள்ளே. நீங்களே சொல்லுங்க அவளை ஊருக்குக் கூட்டிட்டுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/100&oldid=762151" இலிருந்து மீள்விக்கப்பட்டது