பக்கம்:ஒத்தை வீடு.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 113 பொருத்தி வைக்கிற சிகிச்சை முறை. ஆனால், இதுக்கு ஒன்றரை லட்ச ரூபாய் செலவாகும். இதுவும் மிச்சம். அதோட உங்க கணவரோட உயிரணுக்கள் சரியான அளவில் இருக்குது. இதனால அடுத்த வருஷம் நீங்க ஒரு குழந்தையை பெற்றெடுத்தாக் கூட ஆச்சரியமில்லை." மனோகர், தன்னை புதிதாய் கண்டுபிடித்ததுபோல், தன்னையே பார்த்துக் கொண்டபோது, டாக்டர். சந்திரசேகரன், இன்னொரு ஆலோசனையும் வழங்கினார். "உடம்பை லகுவா வச்சுக்கணும். கொத்துக்கறி, குலை. கறி உடம்பு பாலியல் உறவைப் பாதிக்கும். பாரதி சொன்னதுபோல், காற்றில் ஏறி விண்ணைச் சாடுவது மாதிரியான, மிதப்பான உடம்பு தேவை. இதை ஆசனப் பயிற்சியாலும், அளவான உணவாலும், ஆக்கிக் கொள்ளும்போது, நாமே உணரக்கூடியது மாதிரி நமக்குள்ளே ஒரு வாசனை எழும். பொதுவாய், ஒவ்வொரு மனிதருக்கும், பல வாசனைகள் உண்டு. இதில் பாலியல் வாசனை முக்கியமானது. இந்த வாசனையைப் பிற வர்சனைகள் மூழ்கடிக்காமல், பார்த்துக்கனும். உதாரணமாய், ஒரு குழந்தையைக் கொஞ்சும்போது, ஒரு ஆணுக்குப் பெண் மீதோ, பெண்ணுக்கு ஆண் மீதோ ஆசை ஏற்படாது. காரணம், குழந்தையிடம் பீறிடும் வாசனை, பாலியல் வாசனையை அமுக்கிவிடும். இதனால்தான் படுக்கை அறையில், மலர் தூவும் வழக்கத்தை நம் முன்னோர்கள் கொண்டு வந்தார்கள். இப்போது, நான் உங்களுக்கு மலர் தூவ வேண்டிய அவசியமில்லை. அந்த விடுதி நிகழ்ச்சியே, உங்கள் மனதை வைரப்படுத்தியதுடன், அதே மனதில், பாலியல் மலர்களையும் தூவிவிட்டது." மனோகருக்கு, தான் புதிதாய் வளர்ந்தது போன்ற எண்ணம் ஏற்பட்டது. £5 "ஒரு பெண், தாம்பத்ய உறவில் சுகம் பெற வேண்டும்; நிறைவு பெற வேண்டும். இதற்கு, அவளுக்கு முழுமையான உரிமை உண்டு. இந்த உரிமை மறுக்கப்பட்டால், அது சட்டப்படி, மனைவிக்கு இழைக்கப்படும் கொடுமைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பிறக்கும்போதே, கோடிக்கணக்கான சின்னஞ்சிறு முட்டைகளை உள்ளடக்கிய ஒரு பெண், தாய்மை அடைவதற்கும் தடங்கல் ஏதும் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/114&oldid=762166" இலிருந்து மீள்விக்கப்பட்டது