உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒத்தை வீடு.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

157

“அந்தம்மாவுக்கு சாப்பாடு மட்டும்தான் போட்டுக் கொடுக்கத் தெரியும். மற்றபடி பெருந்தூக்கக்காரி அவங்கள சமாளிக்கிறது என் பொறுப்பு. கேட்ல ஒரு பக்கம் திறந்திருந்தால், நீங்க வாறீங்க... மூடி இருந்தால், போறீங்க...”

கவிதா, தனது மாருதி காரில் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தபடி, இடது பக்க முன்னிருக்கைக் கதவை செல்வாவிற்கு திறந்து விடப் போனாள். அந்தக் கதவின் உள் சதுரம் பிய்ந்து போய் முரண்டு செய்து கதவை திறக்க மறுத்தது. இதனால் செல்வா, நீண்டு நெடிந்த பின்னிருக்கையில் கைகளையும் கால்களையும் தாரளமாகப் பரப்பிக் கொண்டு உட்கார்ந்தான்.

6

செல்வா, மத்தியானம் பன்னிரண்டு மணி வரை, கவிதாவைப் பற்றி, தான் எழுதிய உரை வீச்சை அடித்தும் திருத்தியும் அல்லோகலப்படுத்தினான். சுமாரான காகிதங்களில் எழுதப் பட்டதை நல்ல காகிதங்களில் நகல் எடுத்தபோது, “உனக்குன்னு தனியா பறிமாறணுமா?” என்ற சித்திக்காரியின் சத்தம் அவன் காதுகளில் குத்தியது. அவன், அந்தக் காகிதங்களை பயபக்தியோடு தனது நோட்டுப் புத்தகத்தில் வைத்தபோது “தனியா சாப்பிட்டால் என்ன நாய்களா?” என்று, பிள்ளைகளுக்கு குரல் கொடுத்தாள் சித்தி.

செல்வா, அவசர அவசரமாக சாப்பாட்டு மேஜைக்கு ஓடினான். குழந்தைகள் ஏற்கெனவே அங்கே உட்கார்ந்திருந்தன. சித்திக்காரியும் உட்கார்ந்திருந்தாள். ஞாயிற்றுக்கிழமை என்றாலும் அலுவலகத்திற்குப் போய்விட்ட கணவன் மீது கடும் கோபமாக இருப்பது, அவள் சாதத்தை பிசைந்து கஞ்சியாக்குவதிலிருந்து தெரிந்தது. செல்வா, ஒரு கவளத்தை சுபேதாவுக்கு ஊட்டிக்கொண்டே மறு கவளத்தை தனது வாயில் போட்டுக் கொண்டான். சித்திக்காரி அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு, ஒரு செம்பு தண்ணீரையும் மடக் மடக் என்று தொண்டைக் குழிக்குள் அருவியாக்கிவிட்டு போய்விட்டாள்.

செல்வாவும், குழந்தைகளும் சாப்பிட்டு முடித்தபோது, சித்திக்காரியின் குறட்டைச் சத்தம் தோசைக்கல்லில் ஊற்றப்பட்ட ஈர மாவு மாதிரியான ஒலியை எழுப்பியது. செல்வா, சுபேதாவின் கையையும் வாயையும் கழுவிவிட்டு, அருணையும் அப்படி கழுவச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/157&oldid=1854318" இலிருந்து மீள்விக்கப்பட்டது