பக்கம்:ஒத்தை வீடு.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 புதைமண் அசரீரி குரல்போல் செல்வாவிற்கு ஒலித்தது. மெல்லிய குரல் கொண்ட ஏ. சி. வெள்ளை விளக்குகள் அணைந்து, பட்டும் படாமலும் எரியும் மஞ்சள் விளக்கு சத்தியா, இப்போது அவன் கால்மாட்டு பக்கம் வந்து ஆணைபோல் பேசினாள். "கமான் யங்மேன். இப்போ நான் சொல்லிக் கொடுத்த பதினெட்டு உடல் மையங்களில் ஒவ்வொன்றாக உங்கள் பதட்டத்தை ஏற்றப் போlங்க. அப்புறம் ரிலாக்ஸ் பண்ணப் போறிங்க. முதலாவதாக, இரண்டு கைகளையும் முஷ்டியாக்குங்கள். இந்த இரண்டு முஷ்டிகளிலும், உங்கள் உடம்பிலும் உள்ளத்திலும் உள்ள அத்தனை பதட்டங்களையும் முஷ்டிகளுக்கு கொண்டு வாருங்கள்." செல்வா, இரண்டு கைகளையும், மூடிக்கொண்டு, பெருவிரல்கள் மட்டும் நீட்டிக் கொண்டிருக்க, உச்சி முதல் பாதம் வரை உள்ளும்-புறமுமான பதட்டங்களையும், பயங்களையும், நடுக்கங்களையும் அங்கே கொண்டு வந்தான். முஷ்டிகள் வலித்தன. வெளியேறப்போன விரல்களை உள்ளங்கைகளோடு அழுத்தினான். இந்த முஷ்டிகள் தவிர உடம்பில் உள்ள அத்தனை உறுப்புகளும், நாடி நரம்புகளும் லேசானது போன்ற உணர்வு. இரண்டு நிமிடம் ஆனது. சத்தியா, ஒரு தோழனிடம் சொல்வதுபோல் சொன்னாள். "இப்போது முஷ்டிகளை விரல்களாக்குங்கள். விரல்களுக்கு இடைவெளி கொடுத்து, உள்ளங்கையோடு சேர்த்து, ரிலாக்ஸ். ரிலாக்ஸ் மை பாய். ரிலாக்ஸ்." செல்வா, விரல்களை விரித்து, அவற்றையும் உள்ளங் கைகளையும் மென்மையாய் விரிவாக்கி, ஆசுவாசப்படுத்தினான். கைகளில் கட்டிப் போட்டிருந்த ஏதோ ஒரு கல் கீழே விழுந்தது போன்ற உணர்வு. “எப்படி இருக்கிறது பிரதர்." "கைகள் பஞ்சு மாதிரி மென்மையாய் இருக்குதும்மா” "ரொம்ப நல்லதாப் போச்சு. நீங்கள் ஒரினச்சேர்க்கை என்கிற புதை மண்ணிலிருந்து நிச்சயம் விடுதலை ஆவீர்கள். இப்போ அந்த மண்ணிலிருந்து கைகள் வெளிப்பட்டு விட்டன. இனிமேல் முழங்கைகள், மேற் கைகள்ஆகிய நான்கு மையங்கள், நெற்றி, கண், வாய், கழுத்து, மார்பு, வயிறு ஆகிய ஆறு மையங்கள், இரண்டு தொடைகள், இரண்டு முழங்கால்கள், இரண்டு பாதங்கள் ஆகமொத்தம் பதினாறு இடங்களில் உடற்பாரத்தையும், மனப்பாரத்தையும் ஒவ்வொன்றுக்கு இரண்டு நிமிட நேரம் கொடுத்து ஏற்றுங்கள். மூன்று நிமிடம் ஒவ்வொரு உறுப்பையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/230&oldid=762294" இலிருந்து மீள்விக்கப்பட்டது