பக்கம்:ஒத்தை வீடு.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 235 இல்லாமல் இருந்திக்கலாம். இதனால் மறைத்திருக்கலாம். இப்படி மறைப்பதற்கு அவளுக்கு உரிமை உண்டா இல்லையா?” 'உண்டு. ஆனால், மோகனன் கிட் ட என்னை கூட்டிக் கொடுத்தாள். வீடு திறந்திருந்தால் வரச்சொல்லிவிட்டு, டுர் போயிட்டாள்." "அவள் அண்ணன், வீட்டுக்கு வருவதை அவள் எதிர்பார்த்திருக்க மாட்டாள். பூட்டிய கதவை அவன் திறந்தது அவளுக்கு தெரியாது. இது அவள் வேண்டுமென்றே செய்த காரியமா?” "இல்லை. இல்லை." "நான் சொல்வது மாதிரிச் சொல். கவிதா வேண்டுமென்றே செய்யவில்லை." "கவிதா வேண்டுமென்றே செய்யவில்லை." "அப்போ அவளை வெறுக்கலாமா?" 電 "கூடாது. கூடாது. கூடவே கூடாது." "சரி. இப்போ உன்னை மோகனன், உன் அறைக்கு கூட்டிட்டு போகிறான். என்ன செய்யுறான்?" "நான் கவிதாவுக்கு எழுதிய லெட்டரை காட்டி மிரட்டுனான். நான் நடுநடுங்கி போறேன். என்னைக் காட்டிக் கொடுக்காமல் இருக்க ஒரு உதவி கேட்கிறான். நான் வாயைத் திறக்கிறேன்." "அப்புறம். அந்த வெள்ளைக்காரனோட உறவாடும்போது” "முதலில் கஷ்டமாய் இருந்தது. அப்புறம் நான் இயங்கும்போது ஒரு சுகம் கிடைத்தது." 'அப்புறம் மோகனனோடு டீலக்ஸ் நிரோத்தோட ஈடுபடும்போது? "ஒரு தனி வாசனை, தனிச் சுகம் என்ன்ையும் மதித்து அவன், செண்பக வாசனை டீலக்ஸை கொடுத்தான். நான் அவனானேன். அவன் நானானான்." "உனக்கு இப்போ யாரை அதிகமாய் பிடிச்சிருக்கு” "மோகனனை." "ஓ.கே. அவனோட அந்த உறுப்பு புண்ணாகி, சீழ்பிடித்து, நாற்றம் அடித்து, புண் புண்ணாய் இருக்கிறதாய் கற்பனை செய்து பார் செய்துட்டியா?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/235&oldid=762299" இலிருந்து மீள்விக்கப்பட்டது