பக்கம்:ஒத்தை வீடு.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ለ? அத்தனை பேரும் மாமூல் நிலைக்கு திரும்பி விட்டார்கள். செல்வாவை சித்திக்காரி அதிகமாக திட்டுவதில்லை. அவனும், அவள் மெளனத்தைத்தான் தவறாக எடுத்துக் கொண்டான். சித்தப்பாவுக்கும், சித்திக்கும் ஏற்படும் சில்லறை தகராறுகள் வரும்போது, எந்த பயமும் இன்றி, சித்திக்கே வக்காலத்து வாங்கினான். இதில் சித்தப்பாவுக்கு உள்ளூர பெருமைதான். குழந்தைகள் மீண்டும் செல்வாவுடன் ஒட்டிக் கொண்டன. வேன், ஸ்கூட்டர் ஆனது. கவிதா-செல்வா காதல், அந்த தெருவாசிகளுக்கு மட்டுமல்லாமல், அடுத்தடுத்த தெருக்களுக்கும் தெரிந்துவிட்டது. கவிதா, செல்வா வீட்டிற்கு போவதும், செல்வா, கவிதா வீட்டிற்கும் போவதும் வழக்கமாகி விட்டது. ஏற்கெனவே தனது தவறால்தான் மகன் மோகனன் கெட்டழிந்தான் என்ற குற்ற உணர்விலும், கூடவே தன்னோடு சேர்ந்தவளை கவிதா, அம்மா மயமாக்கியதாலும், மூத்த அதிகாரியான, கவிதாவின் தந்தை, லஞ்சம் வாங்குவதை நிறுத்த வில்லையானாலும், அதை குறைத்துக் கொண்டார். அவருள்ளும் ஒரு மாறுதல். கவிதா, மோகனைப்போல் லெஸ்பியன் ஆகாமல், இருப்பதற்கு நல்ல பையனான செல்வாவின் காதலை ஒரு மருந்தாக எடுத்துக் கொண்டார். ஆனாலும், ஒருநாள். செல்வா, முகத்தில் ஈயாடவில்லை. மோகனன், அவனுக்கு தனது பம்பாய் ஹோமோ வாழ்க்கை பற்றி விலாவாரியாய் குறிப்பிட்டுவிட்டு, தங்கை எப்படி இருக்கிறாள் என்பதை அறிய துடிப்பதாக அவனது கல்லூரி முகவரிக்கு ஒரு கடிதம் எழுதினான். இதனால் பழைய நினைவுகள், விசுவரூபம் எடுத்தன. இந்த கடிதத்தை கவிதாவிடம் காட்டியபோது, அண்ணன் முகவரி கிடைத்ததும், மகிழ்ந்து போனாள். ஆனாலும், செல்வா சோர்ந்து போனான். அந்த சோர்வை மறைக்கக்கூடிய அளவிற்கு அவனுக்கு திட சித்தமும் இருந்தது. ஆனாலும், அந்தக் கடிதம் ஒரு கலக்கு கலக்கிவிட்டது. கவிதாவோடு பேசும்போது, அவள் காதலனாகவே இருக்கிறவன், இரவு நேரத்தில் மட்டும், மோகனனுக்கு காதலனாகவும், காதலியாகவும் ஆகிப்போனான். மீண்டும் குடும்பத்திலும், கவிதாவுக்கும் குழப்பம் வருமோ என்று பயந்தான். வெளிப்படையான பயம் அல்ல. உள்ளுரத் தோன்றிய பயம். மறைக்கக்கூடிய பயம். ஆனாலும், அந்தப் பயத்தை அடியோடு ஒழிப்பதற்காக, மீண்டும், டாக்டர் சத்தியாவிடம் முன்னதாக தகவல் சொல்லிவிட்டு சென்றான். அவன் வரவை எதிர்பார்த்ததுபோல், அந்தம்மா,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/238&oldid=762302" இலிருந்து மீள்விக்கப்பட்டது