பக்கம்:ஒத்தை வீடு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 ஒத்தை வீடு மனோகர், அந்த மாலையைப் பறித்து, தனது கரங்களுக்கு கொண்டு வந்தான். அவளும் அதைப் புரிந்து கொண்டவள்போல், சின்னச் சிரிப்பொன்றைச் சிதறவிட்டு, அவன் பக்கமாக கழுத்தை நீட்டினாள். அவன் அந்த மாலையின் கொக்கியையும், அது ஊடுருவிய வட்டத்தையும் பிரித்தான். அந்த முத்துச் சரத்தின் முனைகளை கைக் கொன்றாய் பிடித்தபடி, அவள் கழுத்துக்கு இருபக்கமும் கொண்டு போனான். பிறகு ஒரு முனை கொக்கியை, மறுமுனை வளையத்திற்குள் மாட்டப் போனான். அந்த முயற்சியில், அவள் பிடரி முடி அந்த வளையத்தில் சிக்கியது. கொக்கியை மாட்டியபோது, அவளுக்குப் பிராணன் போகிற வலி. ஆனாலும் வலியைக் கடித்தபடியே வேடிக்கையாகத்தான் கருத்துரைத்தாள். "அய்யோ. என் முடி சிக்கிட்டு. ஒங்க கிட்ட நல்லா மாட்டிக் கிட்டேன். ஒங்களுக்கு எல்லாத்துலயும் எப்பவும் அவசரந்தான். பரவாயில்லை. பழையபடி கழட்டிட்டு மாட்டுங்க." சங்கரி, அவன் கரங்கள் இயங்காம்ல் இருப்பதைக் கண்டாள். 'கடவுளே. கடவுளே. ஒன்று சொன்னால் இது இன்னொரு அர்த்தத்தில்ா முடியனும்: "தப்பு என் மேலதான். இப்படி பிடரியில புதர் மாதிரி முடியை வளர்த்திருக்கப்படாது. சரி. ஒங்க கையாலேயே கட்டி விடுங்க." சங்கரி, கரங்களை பின்புறமாய்க் கொண்டு வந்து, அந்த முத்துச் சரத்தையும், அதில் சிக்கிய முடியையும் விடுவித்தாள். அவன், இதைக் கட்டுவதற்கு வசதியாக அவன் மார்பில் சாய்ந்தாள். விலகிக் கிடந்த அவன் கரங்களை, அந்த முத்து மாலையாய் இணைத்தாள். சடையைத் தூக்கி, பின்தலைக்கு மேல் கொண்டு போனாள் அவன் கரங்கள், இப்போது இயங்கின. மாலை சூடியதை உணர்ந்த சங்கரி, தலையை நிமிர்த்தினாள். அவனோ, நிமிர்ந்த தலையை கையால் அழுத்தி அவளை மடியில் போட்டான். அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தான். பிறகு கட்டிலில் இருந்து துள்ளிக் குதித்து எழுந்தான். பாதிச் சுவராய் பதிந்த அலமாரியைத் திறந்து, ஒரு அட்டைப் பெட்டியைத் திறந்தான். கையில் தொட்டாலே சுகம் கொடுக்கும் ஒரு வழுவழுப்பான துணி.. அசல் புளு. அதுதான் நீல நிறம் மார்பகம் பக்கம் வட்ட வளைவுகள். கழுத்துப் பக்கம் ஜரிகை மாதிரியான மாலை. மொட்டாகவும், மொட்ட விழ்ந்தும், பூவாய் மலர்ந்தும் தோன்றும் நைலான் துணி மாலை. அதில் ஆங்காங்கே பதிந்த சின்னச் சின்ன சதுரக் கண்ணாடிகளைப் பார்த்து, சங்கரி கண் கூசியபடியே கேட்டாள். "அய்யய்ய. இது லம்பாடிப் பெண்கள் போடுறதாச்சே."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/29&oldid=762319" இலிருந்து மீள்விக்கப்பட்டது