பக்கம்:ஒத்தை வீடு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

༤--> ༄ས་༣, ஒத்தை வீடு மலர்ந்த வாய், எருக்கலைப் பூவாய் சுருண்டது. ஒன்றாய் ஒட்டிய உதடுகள், விம்மலுக்கு அணை போட்டன. நெஞ்சில் முட்டி மோதிய வேகத்திற்கும், தாகத்திற்கும் தடை போட்டன. அவள், அவன் கரத்தை வீசியடிக்கப் போனாள். ஆனால் என்ன நினைத்தாளோ. ஏது நினைத்தாளோ. அவன் கரத்தை மென்மையாய்த் துரக்கி அவனிடமே சேர்த்துவிட்டு, அவனிடம் இருந்து புரண்டாள். கோழிக்குஞ்சாய் படுத்தவனைப் பருந்தாகப் பார்க்கப் போனாள். முரட்டுத்தனமாய் இறக்கைகளை அடிக்கப் போன அந்தப் பருந்து, அடுத்த கணமே, தாய்க் கோழியானது. முட்டிக்கால் வரை சுருண்ட நைட்டியை சரிப்படுத்தினாள். குப்புறத் தலை போட்டு, ஐம்புலன்களையும் அடக்கியவளாய் ஆமைபோல் கிடந்தாள். அவன், அவளைப் புரட்டுவதற்கு, ஒரு கையை விலாப் பக்கம் கொண்டு போனான். அவளுக்கு மனம் பற்றி எரிந்தது. சூடாகக் கேட்க, போனாள். ஆனாலும், உடல் சூடும் மனச்சூடும் ஒன்றை ஒன்று தணித்துக் கொண்டன. முத்துச் சரம் போட்டு, நைட்டியில் தன்னை ரசித்த அந்த ஆசை முகத்தை அவள் புசிக்க விரும்ப வில்லை. அவனது சுயமரியாதையை பங்கப்படுத்த விரும்பவில்லை. முத்துச்சரம் குத்திய கழுத்தை லேசாய்த் துக்கி, அவனைப் பார்த்தாள். அவன் குரல் மீண்டும் காதுகளில் விழுந்தது. இயலாமை அல்லம் ஏமாற்றம், ஏமாளி வேடம் போட்டுக் கேட்டது. "என்ன சங்கரி, குப்புறப் படுத்துட்டே?” அவளுக்கு அழுகை வந்தது. தனக்காக மட்டுமல்ல. அவனுக்காகவும் பொங்கியது. ஆனாலும், அவளது. அழுங்குரல், பச்சதாப ரசமந்திரத்தில் நெகிழ்ந்தது. அவள் பேச்சு, மனோகரை ஒரளவு கம்பீரப்படுத்தியது. "என்னை இன்னைக்கு விட்டுடுங்க. ஒரே பல்வலி. கூடவே வயித்து வலி. ஸாரி. நாள்ைக்குப் பார்த்துக்கலாம். பேசாமல் துரங்குங்க. எனக்குத் துளக்கம் வருது." "பல்வலில எப்படித் துக்கம் வரும்.” "எந்த வலியும் உச்சக் கட்டத்துக்குப் போனால் அது மரத்துப் போகும். கையை எடுங்க. பிளீஸ். என்னால முடியல. தூங்கப் போறேன்." "சரியான தூங்கு மூஞ்சி. எவ்வளவு ஆசையைத் தேக்கி வச்சிருக்கேன் தெரியுமா..?" "அது எனக்குத் தெரியும். துங்குங்க" கொஞ்சங்கூட ஒத்துழைக்க மாட்டேங்கிறியே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/31&oldid=762322" இலிருந்து மீள்விக்கப்பட்டது