பக்கம்:ஒத்தை வீடு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் £53 போட்டான் இன்னொரு தடவை, இவளை இந்த அலுவலகத்தில் சேர்த்தவள் மாமூல் கேட்பதாக இவள் முறையிட்டபோது, பக்கத்து அலுவலக பெருக்கல்காரியான அந்த மாமூலை, மிர்ட்டியவன் இவன். அதோடு சரி. "சாரே. சாரே. இந்த ரூமைப் பெருக்கித் துடைக்கணும் சாரே. இந்தாண்டை வா சாரே." "நாளைக்குப் பார்த்துக்கலாம்." "வானாம் சாரே. நீ பொறுத்தாலும் ஏ ஒ. கத்துவார் சாரே. வேணுமுன்னா சோபாவில கால்களை மடித்துப்போட்டு ஒக்காந்துக்கோ. சாரே." மனோகர், அவள் சொன்னபடியே செய்தான். அவள் அந்த அறையை பெருக்கினாள். ஒரு வாளித் தண்ணிரை வைத்துக் கொண்டே ஈரத்துணியால் மொசைய்க் தரைக்கு பளபளப்பு ஏற்றினாள். "சாரே. சாரே செத்தோண்டு நாற்காலிலே உட்காரு சாரே. சோபாவைத் துடைச்சிடறேன்" மனோகர் எழுந்தபோது, அவன் தோள், கங்காவின் தோளில் மோதியது. அவன் கேட்டான். "ஆமா. ஒன் பேரு என்ன..?" "என்ன சாரே. அதுக்குள்ள என் பேரு மறந்து போச்சா..? ஆத்தா வச்ச பேரு கங்கையம்மா.. நானே எனக்கு வச்ச பேரு கங்கா. நீ ஐம்பது ரூபாய ரெட்டிப்பா தந்ததை நா மறக்கல சாரே." "உனக்கு கல்யாணம் ஆயிட்டா." “என்ன சாரே. மஞ்சக் கயித்தப் பார்த்துட்டும் அப்படிக் கேக்கிறே. ஆயி என்ன பிரயோசனம் ? அந்தக் கஸ்மாலம் கை விட்டுட்டான். என்னப் பிடிக்கலையாம். ரெண்டு வருஷத்துக்குப் பிறகு சொல்றான். ஒரு குரங்கு மூஞ்சியோட ஒடிட்டான். அவன் கிடக்கான். என் வேலைய பெர்மனென்டு ஆக்கு சாரே...' "பிரதம மந்திரி நெனச்சாலும் ஒன்னை பெர்மனென்டு ஆக்க முடியாது. ஆனாலும் ஒன்னை ஒரு நல்ல கம்பெனியில சேர்க்கறது,ககுப் பார்க்கிறேன். எதுக்கும் ஒன்னைப் பத்திய பயோடேட் டா அதாவது வயது, படிப்பு இப்படிப்பட்ட விவரங்களை எழுதிக் கொடு." "எட்டாவது படி ச்சாலும் என் எழுத்து தலையெழுத்து மாதிரி கோணல் மாணலா இருக்கும் நீ கேட்டுக் கேட்டு எழுதிக்கோ சாரே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/64&oldid=762358" இலிருந்து மீள்விக்கப்பட்டது