ஜமீன் தார் வரவு
65
க, ஆமாங்க.
ஜ. உன் தாய் தந்தையர் எங்கே வசித்தார்கள்?
க. பட்டணத்தில் ஐயா, அவர்களிருவரும் நான் சிறு குழந்
' தையா யிருக்கும் பொழுது இறந்து போனார்கள். அதன்
பேரில் தான் திருவாப்பூரில் என் பாட்டியார் வீடுபோய்ச்
சேர்ந்தேன்.
ஜ, அந்தம்மாள் என்ன உன் தகப்பனாரைப் பெற்ற பாட்
டியா? நான் இந்தக் கேள்விகளை யெல்லாம் கேட்பதற்
காக மன்னிக்க வேண்டும்--நான் ஒரு காரணமாக இவை
களை யெல்லாம் கேட்கிறேன்,
ஆமாங்கள், அவர்கள் அனேக வருஷங்களாக விதைவை
யாயிருந்தார்கள்.
ஜ. அந்தம்மாளுடைய பெயர் என்ன தெரியுமா உனக்கு?
க.'. பர்வதம்மாள் என்று அவர்கள் பெயர் ஐயா,
3. பர்வதம்மாள்!-இந்த துக்ககரமான கட்டை வண்டி
விபத்து நேரிட்ட பொழுது நீங்கள் எங்கே போய்க்
கொண்டிருந்தீர்கள் ?
'2. வானகரத்தின் பக்கத்திலுள்ள அடையாளம் பேட்
டுக்கு, அங்கே தான் என் பாட்டியார் பிறந்தார்களாம்,
ஜ. ஓ! அவர்கள் தான் எல்லா சந்தர்ப்பங்களும் ஒத்திருக்
கின்றன. அம்மா கன்னி, நீ அறியாதபடி உனக்கு ஒரு
- பந்து கிடைக்கப் பெற்றாய்-நான் தான் அந்த பந்து!
என்னுடைய தா யாரும் வானகரத்தில் பிறந்தவர்களே,
- அவர்களுக்கு பர்வதம்மாள் என்று மாற்றாந்தாய்
வயிற்று சகோ தரி ஒரு அம்மா இருந்தார்கள். நீ பிறந்த தைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன்; உன் தகப் "பனார் இறந்ததும் எனக்கு ஞாபக மிருக்கிறது. அவர் சித்திரம் வரைவதில் மிகவும் கெட்டிக்காரராயிருந்தார்." "உன் தாயாரும் சீக்கிரத்தில் அத்துயர் ஆற்றாது .மடிந்தது எனக்கு ஞாபக மிருக்கிறது. அவர்கள் இறந்த பொழுது எத்தனை. குழந்தைகளை விட்டுச் சென்றார் என்று எனக்