பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. ஒன்றே ஒன்று

இவ்வாறு மனத்தை அடக்கினவர்களில் காரைக்கால் அம்மையார் ஒருவர். அவர் தாம் மனத்தை அடக்கிய வழியைச் சொல்கிருர். அதை வேகமாகப் பார்த்தால் தெளிவுபடாது. சிறிது கிதானமாகப் பார்க்க வேண்டும்.

மனம் கொண்டிமாடு போன்றது. கொண்டிமாடு கண்ட கண்ட இடங்களில் திரிகிறது. அயலார் வயல்களிற் சென்று பயிர்களே நாசம் பண்ணுகிறது. கம்மையே முட்ட வருகிறது. ஒரு நீளமான கயிற்றை அதன் கழுத்தில் கட்டி ஒரு புல் வெளியில் முளை ஒன்றை அடித்துக் கட்டி விடுகிருேம். அது எப்போதும் துறுதுறு வென்று இருப்ப தாதலால், கட்டிப் போட்டவுடன் அது நிற்பதில்லை. வெறி கொண்டது போல நாலுகால் பாய்ச்சலில் ஒடுகிறது. முன்பும் அது ஒடிக்கொண்டிருந்தது. ஆல்ை அப்போது இன்ன திசையில்தான் அது ஒடும் என்று சொல்லமுடியாது. இப்போதும் அது ஓடுகிறது; நடுவில் உள்ள முளையைச் சுற்றி ஓடுகிறது. எவ்வளவு வேகமாக ஓடினலும் அந்த முளையைச் சுற்றிச் சுற்றி வரவேண்டுமே ஒழிய, அதற்குப் புறம்பே போக முடியாது. வட்டமாக ஒட முடியுமேயன்றி

நினைத்தபடி யெல்லாம் பாய முடியாது. -

இதோடு மற்ருென்றும் நிகழ்கிறது. முளையைச் சுற்றி ஓட ஓடக் கயிறு முளையில் சுற்றிக் கொள்கிறது. அதனல் வெளியில் விட்ட கயிற்றின் நீளம் குறைகிறது; மாடு ஓட ஓடத் தன்னே அறியாமலே முளையை நெருங்கிக் கொண்டிருக்கிறது. மாட்டுக்கும் முளைக்கும் உள்ள நீளம் குறைந்து கொண்டே வருகிறது. கடைசியில் முளையும். கழுத்தும் சேரும்போது அது நகர முடியாமல் விழுந்து விடுகிறது. மாட்டுக்கு வேகம் முன்பும் இருந்தது; பின்பும் . இருந்தது. ஆல்ை முளேயைச் சுற்றி வரும்போது இருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/14&oldid=548431" இலிருந்து மீள்விக்கப்பட்டது