பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்லமுதல் இரவுவரை :l 1.

அன்று அவர் வானத்தையே நோக்கிக் கொண்டிருக் தார். கதிரவன் கீழ்த்திசையில் தோற்றுவதுமுதல், அவன் மறைந்து இருள் பரவ, இரவு மெல்ல மெல்ல அடியெடுத்து, வைப்பது வரையில் கூர்ந்து கவனித்தார். -

விடியற்காலையில் கிழக்கு வெளுத்தது. கதிரவன் தோன்றின்ை. வானம் முழுவதும் அவனுடைய ஒளி படர்ந்தது. அந்த இளஞ் சூரியனைக் கண்கொண்டு பார்க்க முடிந்தது. கீழ்வானத்தில் வெண்மையும் லேசான செம் மையும் படர்ந்து ஒளிமயமாக இணேந்து கின்றன. அந்தக் காட்சியை நோக்கினர். எம்பெருமான் திருமேனி இப். படித்தானே சுடர்விட்டு விளங்கும்? கண்ணுல் காணும் இளஞ்சிவப்பாக, பவளத்தைப்போலத் தோற்றுவ: தல்லவா?" என்று அவர் எண்ணினர்

காலேயே போன்றிலங்கும் மேனி என்று பாடினர்.

கதிரவன் மெல்ல மெல்ல வானவளேவிலே ஏறினன்; உச்சி முகட்டுக்கு வந்தான். மேற்கே கிழல்படிய கின் றிருந்த பொருள்களின் உச்சியில் அவன் சுடர் வீசினன். நிழல் அவரவர்கள் அடியில் ஒளித்துக்கொண்டன. நடு நிலையில் நிற்பாருக்கு எல்லாம் புலனவதுபோல எங்கும் அவன் சுடர்க்கரங்கள் பாய்ந்து பொருள்களேப் புலனுகச் செய்தன. இப்போது கதிரவன் வீசிய கதிரில் தூய வெள் ளொளியே பரந்தது. காரைக்காலம்மையார் இந்தக் கடும் பகலாகிய வேளையைக் கண்ணே அகல விரித்துப் பார்த்தார். வெண்மையொளி அவருக்கு இறைவனுடைய திருமேனி யிலே உள்ள வெண்ணிற்றை கினேப்பூட்டியது.

- கடும்பகலின்

வேலேயே போன்றிலங்கும் வெண்ணிறு

என்று பாடினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/21&oldid=548438" இலிருந்து மீள்விக்கப்பட்டது