பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“у

அருள் தமக் கீயும் திருவால

வாய் அரன் சேவடிக்கே

பொருள் அமைத்து இன்பக் கவியல

பாடும் புலவர்களே.

அவர் கொள்கையின்படி இத் திருமுறையில் வரும் நூல்களே இயற்றிய நக்கீரர், கல்லாடர், கபிலர், பாணர் என்னும் நால்வரும் நாயன்மார் கூட்டத்தைச் சேர்ந்தவர்களே, -

இளம் பெருமானடிகள், அதிராவடிகள் என்னும் இரண்டு பெரியர்ர்களேப் பற்றிய செய்திகள் பிறநூல்களிற் காணவில்லை. பட்டினத்துப் பிள்ளையார் வரலாறு தனியே வழங்குகிறது. நம்பி யாண்டார் நம்பி தேவாரத்தை வெளிப்படுத்துவதற்கும் கிருமுறை களே வகுப்பதற்கும் உறுதுணேயாக இருந்தவர். திருமுறை கண்ட புராணம் என்ற நூல் அவர் வரலாற்றைச் சொல்கிறது.

இந்தத் திருமுறையில் உள்ள நூல்கள் விநாயகர், முருகன், சிவபெருமான் ஆகிய தெய்வங்களைப் பற்றியும் நாயன்மார்களைப் பற்றியும் அமைந்தவை. விநாயகரைப் பற்றியவை-3; முருகனைப் பற்றியது-1, சிவபெருமானப் பற்றியவை-26; திருஞான சம்பந்தரைப் பற்றியவை-6; கிருநாவுக்காசைப் பற்றியது-1; கண்ணப்பரைப் பற்றியவை-2; சோம்ான் பெருமாளைப் பாட் டுடைத் தல்ேவராக உடையது-1; கிருத்தொண்டர் அனேவரையும் பற்றியது-1.

இதில் தொகுக்கப் பெற்ற பிரபந்த வகைகள் 41. அவற்றுள் அந்தாதி (வெண்பா-4, கலித்துறை-4)-8, ஆற்றுப் படை-1, இரட்டை மணி மாலை-4, உலா-2, எட்டு-1, எழுகடற் றிருக்கை-1, எழுபது-1, ஏகாதச மாலே-1, ஒருபா ஒருபது-1, கலம்பகம்-1, கலிவெண்பா-1, கோபப் பிரசாதம்-1, கிருமுகப் பாசுரம் (சீட்டுக்கவி)-1, தொகை-1, நான் மணிமாலை-1, பகிகம்-2, பெருந்தேவ பாணி-1, மறம்-2, மும்மணிக் கோவை-7, விருத்தம்-2, வெண்பா-1.

ஏனைய கிருமுறைகளுக்கு இல்லாத சிறப்பு ஒன்று இதற்கு உண்டு. ஆலவாய் இறையஞர் இயற்றிய கிருமுகப் பாசுரத்தை முதலில் உடையது இது. சிவபெருமாஞ்லே இய்ற்றப் பெற்றதாகச் சொல்லப் பெறும் தமிழ் நூல் ஒன்று; இறையனுர் அகப் பொருள் என்ற இலக்கண்ம் அது. அப் பெருமானுல்ே திருவாய் மலர்ந்தருளப் பெற்றவை என்று அன்பர்கள் நம்பும் பாடல்கள் இரண்டு. ஒன்று கொங்குதேர் வாழ்க்கை' என்பது. அது குறுந்தொகை என்ற சங்க நூலில் இரண்டாவது பாட்டாக அமைங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/7&oldid=548423" இலிருந்து மீள்விக்கப்பட்டது