பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vi

திருக்கிறது. மற்றென்று இந்தத் திருமுகப் பாசுரம். வேறு சில பாடல்கள் அப் பெருமானுல் அருளப் பெற்றன என்று சில வரலாறுகள் வழங்குகின்றன. ஆயினும் பெரியோர்களால் ஏற்றுக் கொள்ளப்பெற்று, மதிப்பைப் பெறும் தொகை நூல்களிலே கோக்கப் பெற்றவை இந்த இரண்டு பாடல்களுமேயாம்.

மற்ருெரு சிறப்பும் இந்தத் திருமுறைக்கு உண்டு. இதில் கடைச் சங்க காலத்து நூலாகிய கிருமுருகாற்றுப்படை கோக்கப் பெற்றிருக்கிறது. சங்க நூல்களைப் பயில்வார் இல்லாமல் தமிழுலகம் மறந்திருந்த காலத்திலும் சைவத் திருமுறையில் சேர்க் கப்பெற்றமையின் இந்நூல் மறையாமல் கின்று விளங்கியது.

பதினேராங் திருமுறையை யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரவர்கள் பதிப்பித்திருக்கிறர்கள். வேறு சிலரும் அச்சிட் டிருக்கிறர்கள். பல காலமாக அச்சுப் புத்தகம் இருந்துவரினும் தமிழ் மக்கள் அதிகமாக இத் கிருமுறையில் ஈடுபடவில்லே. அதனுல் இதில் உள்ள பல பாடல்கள் மூல உருவம் இன்னதென்றே தெரி யாமல் இருக்கின்றன. பல பாடல்கள் விட்டுப்போயிருக்கின்றன. பல் பாடல்களின் இடையிற் சில சொற்கள் விட்டுப்போயின. பல பாடல்களுக்குரிய பொருள் இன்னதென்று தெளிவுற இயலாத வகையிலே அவற்றின் உருவம் இருக்கிறது. ஏட்டுச் சுவடிகளே நன்கு ஆராய்ந்து அவற்றிலுள்ள பாடபேதங்களேத் தெரிந்து தொகுத்துப் பொருள் கிச்சயம் செய்தால், பல பாடல்களின் உண்மை உருவத்தைக் காணுதல் கடும்.

பூl குமரகுருபர சுவாமிகளை முதல்வராகக் கொண்டு. அவர் செய்து வந்த சமயத் தொண்டையும் தமிழ்த் தொண்டையும் மிகச் சிறப்பாக நடத்திவரும் திருப்பனந்தாள் காசி மடத்தில் தலைவர் களாக எழுந்தருளியிருக்கும் பூநீழை காசி வாசி அருள் நந்தித் தம்பிரான் சுவாமிகள் அவர்களுடைய விருப்பத்தின்படி 1950-ஆம் ஆண்டில் பதினுேரர்ந் திருமுறையை வெளியிடும் வாய்ப்பு எனக் குக் கிடைத்தது. கிருமுருகாற்றுப் படைக்குப் புதிய வகையில் விளக்கம் எழுதி, ' வழிகாட்டி " என்னும் பெயரோடு வெளியிட முருகன் திருவருள் கடட்டிய செய்கியை அன்பர்கள் அறிவார்கள்.

- 革

இந்தச் சிறிய புத்தகத்தில் பன்னிரண்டு பாடல்களுக்குரிய விளக்கங்கள் உள்ளன. காரைக் காலம்மையாரின் கிருவாக்காகிய இரண்டு பாடல்களும், சேரமான் பெருமாள் பாடல்கள் இரண்டும், நக்கீரர் பாடல்கள் மூன்றும், கபிலர் பாட்டு ஒன்றும், அதிரா வடிகள் பாட்டு ஒன்றும், பட்டினத்துப் பிள்ளையார் பாடல்கள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/8&oldid=548425" இலிருந்து மீள்விக்கப்பட்டது