பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சப்பாணி கொட்டும் ஞானக் கன்று 69

துதிக்கையை உடையவர். அது அவருடைய ஈகையைக் குறிக்கும் அடையாளம். கன்ருனலும் மதம் பொழிகிறது. மற்ற யானைகளின் மதம் போன்றதன்று இது.

'பசுபோதக் கவளமிடக் களித்துண்டு

கருணை என்னும்

வெள்ளமதம் பொழிசித்தி வேழத்தை

கினைந்துவரு வினைகள் தீர்ப்பாம்"

என்பர் பரஞ்சோதி முனிவர்.

மதம் புறப்படுகின்ற இடங்களிலிருந்து மழையைப் போல மதத்தைப் பில்கவிடுகிற யானைக் கன்று விநாயகர்: அவருடைய அருள் வெள்ளந்தான் அப்படி மதமாகப் பொழிகிறது. -

கருங்கைக் கடதடத்து

மாமாரி ஈன்ற மணி.

(கரிய தகிக்கையையும் மதம் பிறக்கும் இடங்களில் பெரிய மழையைப் புறப்படவிடும் மணி போன்ற விநாயகர்.

கடம் - மதம். தடம் இடம். மாரி - மழை. - ஈன்ற - புறக் . படவிடும்.) " . . .

விநாயகர் காமம் அகன்ற ஞான கிலத்திலே தோன் றியவர், அடியவர்களின் தியானத்துக்குப் பொருளாக இருப்பவர், கருணே மிக உடையவர், பேராற்றல் படைத் தவர் என்ற இத்தனையையும் கினேந்து பாடிய பாட்டு இது, இதைப் படித்துச் சொற்பொருள் தெளிந்து அவற் றினூடே பொருந்தியுள்ள குறிப்பை உணர்ந்தால், குழக் தையின் உள்ளத்தில் பாட்டி உண்டாக்கும் இன்பத்தை கம் உள்ளத்திலும் இந்தப் பாட்டு உண்டாக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/79&oldid=548499" இலிருந்து மீள்விக்கப்பட்டது