பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருந்தேன் 81

அளவு வகைதான். புலனுக்கு இனிமை தருவதையும் கருத் துக்கு இனிமை தருவதையும் தேன் என்று சொல்லுவது போல, உயிருக்கு இனிமைதரும் பொருளையும் தேன் என்று சொல்வது பொருத்தந்தானே? ஆகையால் பட்டினத்துப் பிள்ளையார் உயிருக்கு இன்பந்தரும் சிவபெருமானத்தேன் என்ருர். திருவிடைமருதுரில் இந்த நினைவு உண்டாகவே மருதிலே உள்ள தேன் என்று சொன்னர்.

'இறைவனுடைய அருளில் ஊறியவர்களுக்கு இறப்பும் பிறப்பும் இல்லாத முத்தி கிடைக்கும்; இவ்வுடம்பிலே இருந்தாலும் புலன்களே வென்று பாவமில்லாத தாயராக வாழ்வார்கள்; அவர்களுக்கு ஆசை இராது; ஒருவரிடம் சென்று ஒன்றை இரக்கும் அவசியமும் இராது என்ற திரண்ட கருத்தைப் பட்டினத்துப் பிள்ளையார் பாடல் உணர்த்துகிறது. - -

வருந்தேன் இறந்தும் பிறந்தும்;

மயக்கும் புலன்வழிபோய்ப் பொருந்தேன்; நர்கிற் புகுகின்றி

லேன்: புகழ் மாமருதில் பெருந்தேன் முகந்துகொண்டு உண்டு பிறிதொன்றில் ஆசைஇன்றி இருந்தேன்: இனிச்சென்று இரவேன் ஒருவரை யாதொன்றுமே. (இனி இறந்தும் பிறந்தும் துயரமடையேன், மயக்குகின்ற ஐம் புலன்களின் வழியிற் சென்று சாரேன்; நரகத்திற் புகேன் கிரு விடை மருதூரில் புகழையுடைய பெரிய மருதமரத்தடியிலுள்ள இறைவனகிய பெரிய தேனை மொண்டுகொண்டு உண்டு, உள்ள நிறைவுபெற்று வேறு ஒன்றலும் ஆசை இல்லாமல் இருந்தேன். இப் போது ஒருவரிடம் சென்று யாது ஒன்றையும் இாக்கமாட்டேன். புகுகின்றிலேன் புகுகிறேனில்லை. மருது - மருதமரம், கிரு விடைமருதூரில் உள்ள தலவிருட்சம். அதனடியில் இறைவன் எழுங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/91&oldid=548511" இலிருந்து மீள்விக்கப்பட்டது