பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8孕 ஒன்றே ஒன்று

களிலும் கிளவித் தலைவன் இன்னனென்று பெயர் சுட்டப் படாமல் இருப்பவனே. யாரையேனும் பாராட்ட வேண்டு மால்ை அவன் பெயரைச் சார்த்து வகையில்ை எப்படி யாவது பாட்டில் இணைப்பார்கள். அவனுடைய மலையில் இப்படி கிகழ்ந்தது என்ருவது, அவனுடைய வேல்போல் கூரிய விழியுடையாள் என்ருவது, அவனுடைய பகைவர், கள். போகும் பாலே நிலம் என்ருவது சொல்வார்கள். பிற் காலத்தில் எழுந்த கோவை நூல்கள் யாவும் பாட்டுடைத் தலைவர்களைச் சார்த்து வகையில் புகழ்வனவே. மாணிக்க வாசகர் பாடிய திருச்சிற்றம்பலக் கோவையாரின் பாட்டுடைத் தலைவன் தில்லையம்பலப் பெருமான். அந்த நூலில் வரும் காதல் நாடகத்தின் தலைவன் இறைவன் அல்ல. ஆதலின் அக்கோவை அகப்பொருட் கோவை.

கலம்பகம், அந்தாதி முதலிய நூல்களில் பாட்டுடைத் தலைவனேயே கிளவித் தலேவகை வைத்துப் பாடும் புறத் திணைப் பாடாண்திணையைச் சார்ந்த பாடல்களும், பாட்டுடைத் தலைவனச் சார்த்து வகையிற் பாராட்டிப் பெயர் கூருத தலைவனேக் கிளவித் தலைவனக வைத்துப் பாடிய அகத்துறைப் பாடல்களும் இருக்கின்றன. “மதுரைப் பெருமான் தம்முடைய மாலையை இன்னும் அளிக்கவில்லையே!" என்பது போல வருவது புறத்திணேப் பாடாண்பாட்டு. 'மதுரைப் பெருமானுடைய மலையில் என் காதலருடைய மாலையைப் பெருமல் வாடுகின்றேன்"

என்பது போல வருவது அகத்துறைப் பாட்டு.

ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவையில் உள்ள ஓர் அகத்துறைப் பாட்டைப் பார்க்கலாம்.

இந்த நிகழ்ச்சி நடக்கும் இடம் மலே செறிந்த குறிஞ்சி நிலம், ஞானசம்பந்தப் பெருமானுக்குரிய மலை என்று அவருடைய பெயரைச் சார்த்திச் சொல்கிருர் கம்பியாண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/94&oldid=548514" இலிருந்து மீள்விக்கப்பட்டது