பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கே விளேயும்? 35

டார் கம்பி. இந்தப் பெரிய பூமியில் கனத்தையுடைய பெரிய மதில்களையுடைய சீகாழியில் திருவவதாரம் செய்த திருஞான சம்பந்தப் பெருமானுடைய காடுகள் நிரம்பிய மலயில் இந்தக் காதல் நிகழ்ச்சி நடைபெறுகிறதாம்.

- - இருநிலத்துக் கனமா மதிற்காழி ஞானசம் பந்தன் - கடமலைவாய். -

அங்கே ஒரு தினேப்புனம். அதைக் காவல் புரிகிருள் ஓர் இளமங்கை அவளைக் கண்டு காமுறுகிருன் இளமை யும் எழிலுமுடைய ஆடவன் ஒருவன். அவள் பரணின் மேலிருந்து கொண்டு தினேக்கதிரை மயிலும் கிளியும் மானும் உண்ணுமல் காவல் புரிந்துகொண்டிருக்கிருள்.

அந்த ஆடவன் ஒரு பக்கத்திலிருந்து அவளுடைய செய்கையைக் கவனித்துக் கொண்டிருக்கிருன். அவள் எழிலேக் கண்டு கண்டு இன்புறுகிருன். அவள் கூந்தல் எவ்வளவு நீளமாக இருக்கிறது! அவள் சாயல் எவ்வளவு ஒயிலாக இருக்கிறது! மயிலைப் போல இருக்கிறது அந்தச் சாயல், அவள் பேசினலோ கிளி கொஞ்சுவது போல இருக்கிறது. நேரே பாராமல் ம ைற வி லி ரு ங் து அவள் பேசுவதைக் கேட்டால், கன்ருகப் பேசக் கற்றுக் கொடுத்த கிளி பேசுவது போலவே ஒரு மயக்கம் உண் டாகும். அவள் கண்ணிலுள்ள மருண்ட பார்வையை என் னென்று சொல்வது மான் விழிப்பது போல விழிக்கிருள். - அவள் கூந்தல், சாயல், மொழி, விழி ஆகியவற்றை அந்த அழகன் கண்டும் கேட்டும் இன்புறுகிருன். இவ்" வளவு அழகான பெண்ணே இந்தத் தினைப்புனத்தைக் காக் கும்படி வைத்திருக்கிருர்களே என்ன பேதைமைl என்று எண்ணுகிருன். அடுத்தபடி மற்ருேர் எண்ணம் வரு. கிறது. அதை எண்ணித் தானே சிரித்துக் கொள்கிருன். 'இவளை இங்கே காவல் புரிய வைத்தவர்கள் மயிலும் கிளி'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/95&oldid=548515" இலிருந்து மீள்விக்கப்பட்டது