பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௨௨

ஒப்பியன் மொழிநூல்

ரெட்டியார் இலக்கணக் கூற்றுகளுள் பிற பிழைகளுமுள. அவற்றைப் பின்னர் இந் நூலிற் கூறுபவற்றினின்றும் அறிந்துகொள்க.

7. மொழிநூற் பயிற்சிக்கு மொழிகளின் இலக்கணமும் அகர முதலியும் (அகராதியும்) போதிய கருவிகளாம்.

ஒரு சொல்லின் பொருளையும் மூலத்தையும் அறிதற்கு, இலக்கணமும் சொல்லியலும் (Etymology) தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், போலியொப்புமையால் வழு முடிபிற் கிடமாகும்.

கண்டி, பாராளுமன்று என்னும் தமிழ்ச்சொற்கள், condemn, Parliament என்னும் ஆங்கிலச் சொற்களுடன் ஒலியிலும் பொருளிலும் ஒத்திருக்கின்றன. ஆனால், சொல்லியலை நோக்கின், அவை சிறிதும் தொடர்பற்றவை என்பது தெளிவாகும்.

Condemn — L. condemno, from con intensive, damno to damn.

Parliament - Lit. 'a parleying or speaking,' Fr. parlement — parler, to speak, ment, a Lat. suffix.

பாராளுமன்று என்பது பார், ஆளும், மன்று என்ற முச்சொற்களாலானதாயும், Parliament என்பது ஒரே சொல் லாயுமிருத்தல் காண்க.

சொற்கள் பெரும்பான் மொழிகளிற் காலந்தோறும் வேறுபடுகின்றமையின், அவற்றின் மூலவடிவையறிந்தே பொருள் காண வேண்டும்.

மூலம் வேர் (root), தண்டு (stem) என இருவகைப்படும். வளையம் என்னும் சொல்லுக்கு வளை என்பது தண்டு; வள் என்பது வேர்.[1] தண்டை அடியென்றுங் கூறலாம்.

மூலமும் பகுதியும் தம்முளொரு வேறுபாடுடையன. புரந்தான் என்னுஞ் சொல்லுக்கு, புர என்பது மூலமும் பகுதியு


  1. 1.வேரும் முதல் வேர்(Primitive root),வழி வேர் (Secondary root, சார்பு வேர்(Teritiary root) என மூவகைப்படும்.அவற்றுள்,முதல்வேர் மட்டும் மீண்டும் மூவகைப்படும். இவையெல்லாம் பின்னர் விளக்கப்படும்.