பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௫௮

ஒப்பியன் மொழிநூல்

நிலையில், ஆழி (சக்கரம்) என்னும் பெரும் பொருளை யுணர்த்தும்.

ஒ.நோ : புட்டி—புட்டில், விட்டி—விட்டில்.

பாண்டில் என்னும் பெயர் காளையைக் குறிப்பது வடிவு பற்றியேயன்றி, அளவுபற்றியன்று. இனி, பாண்டி என்னும் பெயர் காளைக் கருத்தின்றி இளவட்டம் என்னும் பெயர் போல, வட்டக் கருத்தினாலேயே வயவன் என்னும் பொருளில் பாண்டியனைக் குறித்தது எனினும் பொருந்தும்.

வண்டி (வள் + தி) என்னும் பெயர் முதலாவது வட்டமான சக்கரத்தையுணர்த்திப் பின்பு ஆகுபெயராய் இன்று சகடத்தை யுணர்த்துகின்றது. சக்கரத்தை வண்டியென்னும் வழக்கு இன்றும் தென்னாட்டிலுள்ளது. சிறுவர் களிமண்ணாற் செய்த சக்கரத்தை வண்டி யென்பர். உழவர் கபிலையேற்றத்தின் மேலுள்ள உருளை (Pulley)யைக் கமலைவண்டி யென்பர்.

பஞ்சவன் :

பாண்டியன் தன் நாட்டை ஐந்து பகுதியாக்கி, ஐந்து பதிலாளிகளால் ஆண்டு வந்தமையால், பஞ்சவன் எனப் பட்டான். இதை விசுவநாத நாயக்கர் சரித்திரத்தாலறிக.[1]

குறிஞ்சி, முல்லை முதலிய ஐந்து நிலங்களை யுடையவன் பஞ்சவன் என்ற காரணங் கூறுவது பொருந்தாது, அது ஏனைச் சேரசோழர்க்கும் ஏற்குமாதலின்.

கௌரியன் :

மலைமகளுக்குப் பசுமை நிறம் பற்றிக் கௌரி யென்று பெயர். கௌரி பண்டொருகால் மலையத்துவச பாண்டியனின் மகளாய்ப் பிறந்து (தடாதகைப்பிராட்டி யென்னும் பெயருடன்), பாண்டிநாட்டை யாண்டதாகக் கூறும் திருவிளையாடற் கதை பற்றிப் பாண்டியனுக்குக் கௌரியன் என்னும் எச்சமுறைப் பெயர் (Patronymic) தோன்றிற்று.

அருச்சுனன் நீராட்டுப் போக்கிற்காகத் (தீர்த்த யாத்திரை) தென்னாடு வந்தபோது பாண்டியன் மகளை மணந்ததினாலும், பாண்டியன், பஞ்சவன், கௌரியன் என்னும் பெயர்கள், முறையே, பாண்டவர், பஞ்சவர்,


  1. 1. Pandyan Kingdom, p.121,122.