பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொல்காப்பியர்காலத் தமிழ்நூல்களும் கலைகளும்

௬௫

ஆகையால் உலகமொழிகள் எல்லாவற்றினும் தமிழே மிகத் திருந்திய தென்பதற்கு எள்ளளவும் ஐயமில்லை.

எழுத்தாற் சொல்லும் சொல்லாற் பொருளும் உணரப்படும். எழுத்து, சொல் என்பவற்றின் கூறுபாடுகளும் இயல்புகளும், அவற்றைச் செவ்வையா யுணர்தற்கு எங்ஙனம் பயன்படுமோ, அங்ஙனமே பொருளின் கூறுபாடும் அதன் இயல்புகளும் பொருளைச் செவ்வையா யுணர்தற்குப் பயன்படும்.

பொருளிலக்கணம் ஒன்றையே இலக்கணமாகவும், ஏனை எழுத்தும் சொல்லும் அதற்குக் கருவிகளாகவும் கொண்டனர் முன்னோர். இதை,

பாண்டிய “அரசனும் புடைபடக் கவன்று, 'என்னை? எழுத்துஞ் சொல்லும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றே! பொருளதிகாரம் பெறேமெனின், இவை பெற்றும் பெற்றிலேம்'....”[1] எனக் கூறியதால் அறியலாம்.

பொருளிலக்கணம் வீடும், எழுத்திலக்கணமும் சொல் லிலக்கணமும், முறையே அதற்குட் செல்ல வழியாயிருக்கும் வாயிலும் நடையும் போல்வன.

பொருளிலக்கண முடைமையால் தமிழ் மிக்க இலக்கண வரம்புள்ளது என்று முன்னோர் கொண்டமையை,

“கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து
பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமிழ் ஏனை
மண்ணி டைச்சில விலக்கண வரம்பிலா மொழிபோல்
எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ”

என்ற பரஞ்சோதி முனிவர் கூற்றாலுணரலாம்.

பொருளிலக்கணத்தில், பொருள்கள் எல்லாம் அகம் புறம் என இரண்டாகவும், அவற்றுள், அகம் கைக்கிளை ஐந்திணை பெருந்திணை என ஏழாகவும், புறம் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என ஏழாகவும் வகுக்கப்படும்.

ஒழுக்கநூற் பாகுபாடான அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருள்களுள் இன்பம் இன்னவாறிருந்த தென்று பிறர்க்குப் புலனாகும்படி எடுத்துக்கூற இயலாதவாறு, அகத்தானாயே உணர்ந்து நுகரப்படுதலின் அகமெனப்பட்ட


  1. 1.இறை (ப) பக்.8,9.