பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொல்காப்பியர்காலத் தமிழ்நூல்களும் கலைகளும்

௧௦௩

இருசீரோரடி யம்போதரங்கம்

“உட்கொண்ட தகைத்தொருபால்;உலகறிந்த வலத்தொருபால்; கட்கொண்ட றுளித்தொருபால்;கழிவெய்தும் படித்தொருபால்; பரிவுறூஉந் தகைத்தொருபால்;படிறுறூஉம் பசப்பொருபால்; இரவுறூஉந் தகைத்தொருபால்;இளிவந்த வெளிற்றொருபால்; மெலிவுறூஉந் தகைத்தொருபால்;விளர்ப்புவந் தடைந்தொருபால்; பொலிவுசென் றகன்றொருபால்;பொறைவந்து கூர்ந்தொருபால்; காதலிற் கதிர்ப்பொருபால்;கட்படாத் துயரொருபால்; ஏதில்சென் றணைந்தொருபால்;இயனாணிற் செறிவொருபால்;

தனிச்சொல்

"எனவாங்கு :

சுரிதகம்

"இன்னதிவ் வழக்க மித்திர மிவணலம்
என்னவு முன்னாட் டுன்னா யாகிக்
கலந்தவ ணிலைமை யாயினு நலந்தகக்
கிளையொடு கெழீஇய தளையவிழ் கோதையைக்
கற்பொடு காணியம் யாமே
பொற்பொடு பொலிகநின் புணர்ச்சி தானே.”

வடமொழியிலுள்ள உத்தம் முதல் உற்காதம் வரையுள்ள 26 சந்தங்களும்; நிகர்த், புரிக், விராட் முதலிய அளவழிச் சந்தங்களும்; மண்டிலம் (விருத்தம்) என்னும் இனயாப்புள் அடங்கும்.

தமிழ்ச்செய்யுட்கள் பா, பாவினம் என இருவகைப்படும். அவற்றுள், பா வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என நான்கு. பரிபாடல் கலியின் திரிபு. மருட்பா முதலிரு பாக்களின் கலவை. பாவினம், துறை, தாழிசை, மண்டிலம் என மூன்று. இவை ஒவ்வொரு பாவிற்கு முரியன. மண்டிலத்தைப் பிற்காலத்தார் விருத்தம் என்னும் வட சொல்லாற் குறித்ததுடன், வடமொழி யாப்பாகவுங் காட்டினர். இதன் விளக்கத்தைத் தமிழ்ப் பொழிலில் யான் வரைந்துள்ள 'பாவினம்' என்னுங் கட்டுரையிற் கண்டுகொள்க.

ஒரு மொழியின் வடிவம் உரைநடை, செய்யுள் என இரண்டு. அவற்றுள் செய்யுள் சிறந்தது. செய்யுளிற் சிறந்தவர் தமிழர். முற்காலத்தில் தமிழ்ப்புலவர் உரையாட்


ஒ.மொ.—12