பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௦௪

ஒப்பியன் மொழிநூல்

டெல்லாம் செய்யுளாகவே யிருந்தன. கலைகளெல்லாம் பெரும்பாலும் செய்யுளிலேயே எழுதப்பட்டன. அகராதி (நிகண்டு) கூடச் செய்யுளி லெழுதப்பட்டது. பல்வகைத் தொழிலாளரும் செய்யுளியற்றுந் திறமையுடையவராயிருந்தனர். முன்னைய பயிற்சியும் ஊக்கலுமிருப்பின், இக்காலத்தும் கடும்பாவலர் (ஆசுகவிஞர்) தோன்றலாம்.

செய்யுளைப் பிறமொழியாரெல்லாம் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என அறுவகையாயே யாராய்ந்தார்; தமிழரோ இருபத்தாறு வகையா யாராய்ந்தார். அவ்வகை யாவன:—

“மாத்திரை யெழுத்திய லசைவகை யெனாஅ
. . . . .. . . . .. . . . .. . . . .. . . . .. . . . .
ஆறுதலை யிட்ட வந்நா லைந்தும்
. . . . .. . . . .. . . . .. . . . .. . . . .. . . . .
நல்லிசைப் புலவர் செய்யு ளுறுப்பென
வல்லிதிற் கூறி வகுத்துரைத் தனரே.” (தொ.செ.1)

(1) “மாத்திரை யென்பது, எழுத்திற்கோதிய மாத்திரைகளைச் செய்யுள் விராய்க்கிடக்கும் அளவை யென்றவாறு....(2) எழுத்தியல்வகை யென்பது, மேற்கூறிய எழுத்துகளை இயற்றிக்கொள்ளுங் கூறுபாடு.(3) அசைவகை யென்பது அசைக் கூறுபாடு; அவை இயலசையும் உரியசையுமென இரண்டாம்.(4) யாத்தசீர் என்பது, பொருள்பெறத் தொடர்ந்து நிற்குஞ் சீரென்றவாறு.(5) அடியென்பது, அச்சீர் இரண்டும் பலவுந் தொடர்ந்தாவதோர் உறுப்பு.(6) யாப்பு என்பது, அவ்வடிதொறும் பொருள் பெறச் செய்வதொரு செய்கை.(7) மரபு என்பது காலமு மிடனும்பற்றி வழக்குத் திரிந்தக் காலுந் திரிந்தவற்றுக்கு ஏற்ப வழுப்படாமைச் செய்வதோர் முறைமை.(8) தூக்கு என்பது, பாக்களைத் துணித்து நிறுத்தல்.(9) தொடைவகை யென்பது, தொடைப்பகுதி பலவு மென்றவாறு.(10) நோக்கு என்பது, மாத்திரை முதலாகிய உறுப்புகளைக் கேட்டோர்க்கு நோக்குப்படச் செய்தல்.(11) பா என்பது, சேட்புலத்திருந்த காலத்தும் ஒருவன் எழுத்துஞ் சொல்லுந் தெரியாமற் பாட மோதுங்கால், அவன் சொல்லுகின்ற செய்யுளை விகற்பித்து இன்ன செய்யுளென்று உணர்தற் கேதுவாகிப் பரந்துபட்டுச் செல்வதோர் ஓசை.(12)அளவியல் என்பது, அப் பா வரையறை.(13) திணை யென்பது, அகம் புறமென்று அறியச் செய்தல்.(14) கைகோள் என்பது, அவ்வத் திணை