பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௹௪

ஒப்பியன் மொழிநூல்

“இலங்குநீர் வரைப்பிற் கலங்கரை விளக்கமும்”[1] என்று சிலப்பதிகாரத்திலும் கூறியிருப்பதால், பண்டைத்தமிழரின் கலஞ்செய்வினையும்(Ship building) நீர்வாணிகமும் நன்றாய் விளங்கும்.

வாரித்துறைபற்றிய பல தமிழ்ச்சொற்கள் மேலையாரிய மொழிகளில் வழங்குகின்றன. அவையாவன :—

வாரி = கடல். வார் + இ = வாரி. வார்தல் நீளுதல்.

“வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள”

என்பது தொல்காப்பியம்,(உரி. 21)

நீர் ஓரிடத்தினின்று நீள்வதால் நீர் என்றும் வாரி யென்றும் கூறப்பட்டது.

நீள் — நீர். ஒ.நோ : கள் — கரு (நிறம்). தெள் — தெருள். வார் + இதி = வாரிதி (வ.). வார் + அணம் = வாரணம்.

வாரி, வாரிதி, வாரணம் என்னும் நீர்ப்பெயர்கள், சிறந்த நீர்நிலையும் பிற நீர்நிலைகட்குக் காரணமுமான கடலைக் குறித்தன.

வாரி - L. mare, the sea; Fr. mer, mare, pool; Ger- and Dut. meer; A.S. mere; E. mere, a pool or lake.

வாரணம் - L. marinus, E. marina, n. marine, maritime, adj.

வாரணன் கடலோனான நெய்தல்நிலத் தெய்வம். வாரணன் என்னும் தமிழ்ப்பெயர் வடமொழி வடிவத்தை யொட்டி வருணன் என்று திரிக்கப்பட்டது. இந்திய ஆரியர், மேலையாசியாவினின்றும் நிலவழியாய் இந்தியாவிற்கு வந்தமையால், வாரித் துறையறிந்தவரல்லர். சமுத்திரம் என்று வேதத்திற் சொல்லி யிருப்பது, வானத்திலுள்ள மேகப்படலத்தை.[2]

நாவாய் - L. navis.O. Fr. navis, Gr. naus, Sans. nau, E. navy, n. nautical, adj.


  1. 1.கலங்கரை விளக்கம்-LightHouse.
  2. 2,Vedic India,p.107.