பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொல்காப்பியர்காலத் தமிழ்நூல்களும் கலைகளும்

௧௫௹

நால்வாய் (யானை) - நாவாய், நால்வாய்போல் அசைவதால் கப்பல் நால்வாயெனப்பட்டது (உவமையாகுபெயர்).

“நாவாய் - களிகள்போற் றூங்குங் கடற்சேர்ப்ப”

என்றார் முன்றுறையரையனார். களி - மதங்கொண்ட யானை. களிகொள்வது களிறு (ஆண்யானை). கள் + இ = களி. கள் = மயக்கம், மதம்.

“வெளி விளக்குங் களிறுபோலத் தீம்புகார்த் திரைமுன்றுறைத் தூங்குநாவாய் துவன்றிருக்கை”

என்ற பட்டினப்பாலை யடிகளையுங் காண்க.

நால்வாய் - நாவாய். பொருள் வேறுபடுத்தற்கு இடைக் குறைந்தது.

படகு - Low. L. bargia, Gr. baris, O. Fr. barge, a boat.

Low. L. barca, Fr. barque, E. bark, barque, a ship of small size.

படகு — barge—bark. ட-ர, போலி.

ஒ.நோ : முகடி — முகரி, குடகு — Coorg.

Galleon (Sp. galeon - Low. L. galea), galley (O. Fr. galee - Low. L. galea) என்னும் பெயர்கள் கலம் என்னும் பெயரையும், Ship (L. scapha, Gr. skaphos, Ger. schiff, ice.skip, Goth.skip, A.S. scip, E. skiff) என்னும் பெயர் கப்பல் என்னும் பெயரையும் பெரும்புடை ஒத்திருக்கின்றன.

கட்டுமரம் என்பது catamaran என்றானது மிக அண்மையிலாகும்.

Sail என்பது சேலை அல்லது சீலை என்னும் பெயரை யொத்திருப்பது முன்னர்க் கூறப்பட்டது.

நங்கூரம் - L. ancora, Gr. angkyra, Fr. ancre, E. anchor.

நங்கூரம் வடிவத்திற் கலப்பைபோன்றிருப்பதால், அப் பெயர் பெற்றது. நாங்கூழ், நாகேல (தெ.), நாஞ்சில் என்பன கலப்பைப் பெயர்கள். நாங்கூழ் - நங்கூரம் - anchor. ஆங்கிலப்