பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௯௦

ஒப்பியன் மொழி நூல்

(4) மாறே[1] (மாறு+ஏ) என்பது இருமொழியிலும் ஏதுப் பொருளிடைச் சொல்லா யுள்ளது.

இந்தியில் ‘கே’ என்னும் உருபோடு சேர்ந்தே வரும்.

{5) இந்தியில், செயப்படுபொருள் குன்றாவினைப் பகுதிகள் ஆவ் (வா ஜாவ் போ) என்னும் ஏவலொருமையுடன் கூடி, இறத்தகால வினையெச்சப் பொருள்படும். கா : ஸுன் ஜான் = கேட்டுவிட்டுப்போ.

இங்ஙனம் தமிழிலுமுண்டு, ஆனால், வினைப்பகுதிகள் இறந்தகால வினையெச்சப்பொருள்படாமல் நிகழ்கால வினை யெச்சப்பொருள்படும்.

கா : கேள்வா=கேட்கவா ; கேள்போ = கேட்கப்போ.

(6) இந்தியில் இறந்தகால வினையெச்சங்களும் முற்றுக்களும் ஆண்பாலொருமையில் ஆகார வீறாயுள்ளன.

கா : ஆயா = வந்தான், வந்து.

போலா = சொன்னான், சொல்லி,

இவை ‘செய்யா’ என்னும் வாய்பாடு, வினையெச்சமே பண்டைத் தமிழிலும் வினை முற்றாய் வழங்கிற்று. பாலுணர்த்தும் ஈறு பிற்காலத்திற் சேர்க்கப்பட்டது.

வழக்கு : ‘பல்லைப் பிடுங்கிவிடு’ என்னும் வழக்கு செருக்கடக்கு என்னும் பொருளில், ‘தாந்த் கட்டேகாதோ’ என்றும், ‘உயிரைக் கையிலேந்திக் கொண்டு நடு’ என்பது 'ஜான்லேக்கர் பாக்' என்றும் இந்தியில் வழங்குதல் காண்க.

(viii) இந்தியாவிற்கு மேற்கே பெலுச்சிஸ்தான மலை நாட்டில் பிராஹுயீ என்னும் திராவிடச் சிறுபுன்மொழி வழங்கல்.

(ix) பெலுச்சிஸ்தானத்திற்கப்பால் திராவிடமொழி வழங்காமையும், திராவிடச்சொற்களே வழங்குதலும்.

ஒருமொழி தன்னாட்டிற் செவ்வையாயிருந்து, அயல்நாடு செல்லச்செல்லத் திரிவது இயல்பு. ஆங்கிலம் இங்கிலாந்தில் செவ்வையாகவும், இந்தியாவில் திரிந்தும், அப்பிரிக்கா சீனம்


  1. புறம் 4, 20, 22, 92—3, 271, 380; நற்.231.