பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௯௬

ஒப்பியன் மொழி நூல்

கோவன், கோன் என்னும் பெயர்கள் இயற்பொருளில் இடையனையும், உருவகப் பொருளில் அரசனையுங் குறிக்கும்,

"கோவனிரை மீட்டனன் (சீவக, 455) என்பதில் இடையனையும், கோவனும் மக்க தில் அரசனையும் கோவன் என்னுஞ் சொல் குறித்தது.

கோன் கோனார் (உயர்வுப்பன்மை) என்னும் பெயாகள் இடையர்க்குக் குடிப்பெயராய் வழங்குகின்றன. கோன் என்னும் சொல், செங்கோன் கடுங்கோன் என்னும் பெயர் களில் அரசனைக் குறித்தது.

அரசன் என்னும் பொருளில், கோன் என்னும் பெயரே ஈ கெட்டுக் கோ என்றாகும். தலைக்கழகக் காலத் தரசர் பெயர் செங்கோன் கடுங்கோன் என்று வழங்கினதையும், கடைக்கழகக் காலத்தரசர் பெயர் (பாலைபாடிய பெரும்) கடுங்கோ , இளங்கோ (அடிகள்) என்று வழங்கினதையும், கோ என்னும் பெயர் பசுப்பொருளுக் கேற்பதையும் கோன் என்னும் பெயர் அரசனுக்கும் இடையனுக்கு மன்றிப் பசுவுக் கேலாமையையும் நோக்குக.

கோ என்பதை, ஆ மா என்பவற்றோடு சேர்த்து, "ஆமா கோனவ் வணையவும் பெறுமே" என்று பவணந்தியார் கூறியது தவறாகும்.

கோடான்னும் பெயர் பெற்றுத் திற்கு வழக்கற்றுப் போன மையின், கோன் என்பதின் ஈறுகெட்ட வடிவம், அரசனைக் குறிக்கும்போது மயக்கத்திற்கிடமில்லை,

தா என்னும் சொல் ஆரிய மொழிகளில் வழங்கினும், தமிழுக்கு எங்கனம் உரியதோ, அங்ஙனமே கோ என்னுஞ் சொல்லும் உரிய தென்க. இன்னும் இதன் மயக்குத் தெளிய, இப்புத்தகத்தின் இறுதியிற் காண்க.

அரசியல் பற்றிச் சில தமிழ்ச்சொற்கள் ஆரிய மொழி களில் வழங்குகின்றன. அவை அரசு, பாழி முதலியன. அரசு என்னுஞ் சொல்லின் வரலாறு பின்னர்க் கூறப்படும்.

பாரி = கதர். Gr. polis, a city. இச் சொல்லிலிருந்தே , police (the system of regulations of a city), policy (manner of governing a city or nation), political (pertaining to policy) politics (science of government). polity (civil constitution) முதலிய சொற்கள் பிறக்கும்.