பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழகத்தின் தொன்மைக் குறிப்புக்கள்

௧௯௭

தொழிற் பெருக்கமும் குலப் பிரிவும் :

மருத நிலத்தில் முதலாவது உழவர் என்னும் ஒரே வகுப்பார் இருந்தனர். பின்பு, முறையே வணிகம் அரசியல் துறவு என்பன பற்றி, அவ்வகுப் பினின்றும் பிரிந்து போனவர், வாணிகார் அரசர் அந்தணர் எனப்பட்டார்.உழவர் முதலிய நாற்பாலும் பிற்காலத்தில் ஏற்றத் தலைமை முறையில் தலை மாற்றிக் கூறப்பட்டன. உழவர் கடையிற் கூறப்பட்டமையின் கடையர் எனப்பட்டார்.

கொல், நெசவு முதலிய கைத்தொழில்பற்றிய பின்பு உழவர் குலத்தினின்றே பலர் பிரிந்தனர்.

உழவர் பிறரை தோக்க, வேளாண்மையில் (உபசாரத்தில்) சிறந்திருந்தமையின் வேளாளர் எனப்பட்டார். அவருள் வறியராயினார் உழுதுண் பாரும் செல்வராயினார் உழுவித்துண் பாருமாயினர். இவரே நிறம்பற்றி முறையே கருங்களமர் அல்லது காராளர் என்றும், வெண்களமா அல்லது வெள்ளாளர் என்றுங் கூறப்படுபவர். களத்தில் வேலை செய்பவர் களமர்.

கருங்கள மரும் ஒழுக்கம், ஊண், இடம், பழக்க வழக்கம் முதலியன பற்றிப் பிற்காலத்திற் பற்பல குலமாய்ப் பிரிந்து போயினர். இங்ஙனமே பிறகுலத் தாரும். இவற்றின் விரிவை எனது தென்னாட்டுக் குலமரபு என்னும் நூலிற் கண்டுகொள்க.

நகரத்தில் அரசியல் தோன்றினபின் திணை மயக்கம் ஏற்பட்டது.முல்லை நிலத்திலிருந்த இடையரும் பாலைநிலத்திலிருந்த கள்ளர் மறவரும், நெய்தல் நிலத்திலிருந்த செம்படவரும், குறிஞ்சி நிலத்திலிருத்த குறவரும் நகரத்திற்கு வந்து தத்தம் தொழிலைச் செய்வாராயினர். அவருட் கள்ளரும் மறவரும் முறையே சோழனுக்கும் பாண்டியனுக்கும் படைரூ ராயினர். பண்டைத் தமிழ் நாட்டின் வெற்றிச் சிறப்பிற்கு இவ்விரு குலமும் பெருங்காரணமென்பது தென்னாட்டுக் குலமரபில் விளக்கப்படும்,

கள்ளர் தனித் தமிழராயிருப்பவும், அவரைப் பல்லவரென்று ஓர் அயல் வகுப்பாராகக் கூறி வருகின்றனர் சிலர்: பல்லவர் என்பார், கி.பி. 4 ஆம் நூற்றாண்டு முதல் 9 ஆம்