பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௯௮

ஒப்பியன் மொழி நூல்

நூற்றாண்டு வரையும், சோழ நாட்டை அல்லது தொண்டை மண்டலத்தையாண்ட ஓர் அரசக் குடும்பத்தாரேயன்றித் தனிக் குலத்தினரல்லர். அவருடைய குடிகளும் படைஞரும் தமிழரே, அவருக்குத் தனிமொழியும் தனிமதமுமில்லை , தமிழ் நாட்டு மொழிகளும மதங்களுமே அவர்க்கிருந்தனவும், செல்வமும் மறமும் படைத்த எவனும், ஒரு படையைத் திரட்டிக் கொண்டு ஒரு நாட்டைக் கைப்பற்ற என்றும் இடமுண்டு.

பல்லவர்க்கிருந்த பட்டப் பெயர்களுள், தொண்டையன் என்பதும் ஒன்று, பல்லவர்க்கும் பன்னூற்றாண்டுக்கு முன்பே, சோழ நாட்டின் வடபாகத்திற்குத் தொண்டை மண்டலம் என்றம், அதன் அரசனுக்குத் தொண்டைமான் என்னும் பெயர் வழங்கினமை பெரும்பாணாற்றுப்படையா லறியப்படும். அவ்வாற்றுப்படைத்தலைவனைப் பாடிய கடியலூர் உருத்திரங் கண்ணனார், கரிகால் வளவனையும் பாடியுள்ளார். கரிகால் வளவன் காலம் கி.பி.1 ஆம் நூற்றாண்டாகும். ஆகையால். புதுக்கோட்டை அரசரைத் தொண்டைமான் என்னும் பட்டம் பற்றிப் பல்லவ மரபினராகக் கூறுதல் பொருந்தாதென்க. மேலும் தொண்டைமான் என்பது தனித் தமிழ்ச்சொல்லாதலுங் காண்க.

வழிபாடும் மதமும் :

வழிபாடாவது ஒரு சிறு தெய்வத்தையேனும் முழு முதற் கடவுளையேனும் வணங்கும் வணக்கம். மதமாவது வீடுபேறு சருதி முழுமுதற் கடவுளை யடையும் பெருநெறி.

மதி+அம் - மதம். மதித்தல் - கருதுதல். கடவுளைப் பற்றிய மதிப்பு மதமாகும். மதத்திற்குச் சமயம் என்றும் பெயருண்டு சமை+ அம் (சமையம்)-சமயம். சமைதல் - பக்குவமாதல்: பெண்டிர் பூப்படைதலையும் அரிசி சோறா தலையும் சமைதல் என்று சொல்லுவதும், பக்குவமாதல் என்னுங் கருத்துப்பற்றியே, மதம் ஆன்மாக்களை வீடு பேற்றிற்குப் பக்குவப்படுத்தலால் சமயம் எனப்பட்டது. சமையம் = பக்தவமான வேளை. வேளை, சம்யம் பக்குவ மாக்கும் நெறி அல்லது கொள்கை. வேளையைக் குறிக்கும் சமையம் என்னும் சொல், மதத்தைக் குறித்தற்கு ஐகாரம் அகரமாயிற்று. ஒரு சொல் பொருள் வேறுபடுதற்கு எழுத்து மாறுவது, ஒரு சொல்லியல் நூல் தெறிமுறையாகும்.

கா : பழைமை (தொன்மை )-பழமை (புராணம்) - முதலியார்-முதலியோர்.