பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழகத்தின் தொன்மைக் குறிப்புக்கள்

௨௦௩


யாடற் புராணமும் குமரிமலையை மகேந்திரமென்று வடநூல் களும் ஐந்திரத்தை 'விண்ணவர் கோமான் விழு நூல்' என்று சிலப்பதிகாரமும் கூறுவதும், வேந்தன் விழாவை ஒரு சோழன் நிறுத்தியதால் புகார் கடல்வாய்ப்பட்டதென்ற கொள்கையும் விளக்கும்.

வேந்தனுக்குச் சேணோன் புரந்தரன் என்றும் பெய ருண்டு, சேண் உயரம், சேணுலகத்தரசன் சேணோன், வாலு லகைப் புரந்தருபவன் புரந்தரன். புரந்தருதல் காத்தல்,

நெய்தல் நிலத்தெய்வம் வாரணன்

வாரணம்=கடல்; வாரணன்-கடலோன்

கடல் மீனாகிய சுறாவின் கோடு (முதுகெலும்பு) வாரண னுக்கு அடையாளமாகக் கொள்ளப்பட்டது:

கடைக்கழகத்திற்குப் பின்புகூட தமிழர் வாரித் துறையில், தேர்த்திருந்தமையும், தமிழரசர் நாவாய்ப்படை வைத்திருந் தமையும்,

"காந்தளூர்ச் சாலை கலமறுத் தருளி.. முரட்டொழிற் சிங்களர் ஈழமண் டலமும் .... முந்நீர்ப் பழந்தீவு பன்னீ ராயிரம்
திண்டிறல் வென்றித் தண்டாற் கொண்டதன்"

என்று முதலாம் இராஜராஜசோழன் (985) கல்வெட்டும்,

"அலைகடல் நடுவுட் பலகலஞ் செலுத்திச்
சங்கிராம விசையோத் துங்க வர்மம்
னாகிய கடாரத் தரசனை வாகையம்
பொருகடல் கும்பக் கரியொடு மகப்படுத்து...........
தேனக்க வார்பொழில் மா தக்க வாரமும் தொடுகடற் காவற் கடுமுரட் கடாரமும்
மாப்பொரு தண்டாற் கொண்ட கோப்பர கேசரி"

என்று இராஜேந்திர சோழன் (1012) கல்வெட்டும் கூறுவதா இலும், 13-ஆம் நூற்றாண்டுவரை பாண்டியரும் சோழரும் ஈழத்தொடு வைத்திருந்த போர் நட்புத் தொடர்பினாலும் அறியப்படும்.


  • காந்தளூர்-மேல்கரையில் ஒர் ஊர். t ஈழம் - இலங்கை . 1 நக்கவாரம் --Nicobar. கடாரம்-பர்மா .