பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழகத்தின் தொன்மைக் குறிப்புக்கள்


என ஐயுறக் கிடக்கின்றது. கலைமகள், மலர்மகள், நில மகள் முதலிய பெயர்களில் மகள் என்பது மூறைகுறிக்காது பெண் பாலையே குறித்தல் காண்க. பர்வதவரசன் என்னும் தொடரும் மலைகட்கு அரசு போற் சிறந்த பனிமலையையே குறித்தலையும், சிவன் பண்டு குறிஞ்சித் தெய்வமாயிருந்ததையும், மகேந்திரம் முழுகிய பின் பனிமலை சிவனுக்குச் சிறந்த இடமாகக் கொள்ளப்பட்டமையையும் நோக்குக. ஆகவே, மலையரசன் பெற்ற மகள் என்பது பனிமலை அடைந்த அல்லது தாங்கிய பெண்டெய்வம் என்றே பொருள்படுவது காண்க.

சிவனியமும் (சைவமும்) மாலியமும் (வைணவமும்) வெவ் வேறு சமயங்களா யிருக்க அவற்றை ஆரியர் முத்திருமேனி (திரிமூர்த்தி)க் கொள்கை பற்றி ஒன்றாயிணைத்ததால், சில புதுக் கருத்துக்களைக் கொள்ள வேண்டியதாயிற்று. அவை யாவன

அரன் = தேவன். இப்பெயரின் வரலாறு பின்னர்க் கூறப் படும்,

(1) சிவ பெருமானுக்கு அழிப்பும் திருமாலுக்குக் காப்பும் தொழிலாக வகுத்தல்,

தீ போல்பவன் சிவன் என்றும் மேகம் போல்பவன் திருமால் என்றுங் கொண்டமையால், முறையே அவற்றின் தொழிலான அழிப்பும் காப்பும் அவ்விருவர்க்கும் கூறப்பட்டன. தீ ஆண்டன்மையும் நீர் பெண்டன்மையுங் குறித்தற்கேற்றல் காண்க:

(2) அரியரன் (ஹரிஹரன் அல்லது சங்கர நாராயணன்) என்ற வடிவம் அமைத்தல்.

(3) திருமாலை மலைமகளுக்கு அண்ணன் என்றல்:

இவ்விருவர் நிறமும் கருமை யென்பதையும் நோக்குக. கருமை, நீலம், பசுமை என்னும் மூன்றும் ஒன்றாகவே கொள்ளப்படும்:

(4) பிரமன் திருமானின் மகன் எனல், இம்முறை காட்டற்கே, பிரமனுக்குத் திருமாலின் திருவுந்தித் தொடர்பு கூறப்பட்டது.

ஒ. மொ .-19