பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒப்பியன் மொழி நூல்


'உரு+உ = உருவு. உருவு + அம் = உருவம்.
உருவு-உருபு (வேற்றுமை வடிவம்).
உரு. உருப்படி என்னுஞ் சொற்கள், எத் துணையோ பொருள்களில் உலகவழக்கில் வழங்குகின்றன.

உரு என்னுஞ் சொல்லின் வரலாறு மிக முக்கியமானது. இது இந்நூலின் மூன்றாம் படலத்தில் விரிவாகக் கூறப்படும். உருவம் என்னுந் தமிழ்ச் சொல்லே, வடமொழியில் ரூப என்று திரியும். இது வட நூலார் கூற்றையொட்டிப் பல்கலைக்கழக அகர முதலியிற் றலை மாறிக் கூறப்பட்டுள்ளது.

சிவன் நெருப்பின் தன்மையும் அழிப்புத் தொழிலும் உடையவராதலின், உருத்திரன் எனப்பட்டார். உரு + திரம் - உருத்திரம் (ருத்ரம்-வ.) சினம். திரம் ஒரு தொழிற் பெயர் ஈறு, உருத்திரத்தையுடையவன் உருத்திரன். உருத்திரன் என்னும் தமிழ்ப் பெயரையே, ருத்ர என்னும் ஆரிய வடிவில் சினக்குறிப்புத் தோன்றுங் கடுங்காற்றிற்குப் பெயராயிட்டனர் ஆரியர் என்க.

அக்கம் = கூலம் (தானியம்), மணி, அக்கம் - அக்கு. அக்கஞ் சுருக்கேல் என்றார் ஔவையார், கூலம் மணியென்றும் பொருள்படுவதை, நென்மணியென்னும் வழக்காலறிக.

கொக்கிறகக்கம் (திருப்பு, 416.)

உருத்திரன் பற்றி யணியப்படும் அக்கம் உருத்திராக்கம். நீட்டற் புணர்ச்சி (தீர்க்க சந்தி)யும், மரூஉ முறையில், தமிழுக்குச் சிறுபான்மை யுண்டென்பதை, மராடி, குளாம்பல், எனாது, குணாது என்னும் வழக்குகளால் உணர்க. 'உருத்திராக்கத்தின் சிறப்புப் பண்பை , பூத எநூலும் (Physics) நிலைத்திணை நூலும் (Botany) அறிந்தவர் ஆராய்ந்து கூற வேண்டும்.

உருத்திராக்கத்தை ருத்திராக்ஷம் என்று திரித்து, ருத்திரனின் கண்ணிலிருந்து தோன்றியதாக ஒரு கதை கட்டினர் ஆரியப் பழைமையா, இங்ஙனம் கூறுவதற்குக் காரணம், ரா (Ra) என்னும் (சூரியத்) தெய்வத்தின் கண்ணீரே மழையென்றும், அதிலிருந்து பயிர்பச்சைகள் தோன்றுகின்றன வென்றும், பண்டை யெகிப்தில் வழங்கிய ஒரு பழைமைத் கொள்கையை, மேலையாசியாவி லிருந்தபோது ஆரியர் கேட்டறிந்ததேயென்று தோன்றுகின்றது: