பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழகத்தின் தொன்மைக் குறிப்புக்கள் பிற்காலத்தில், ருத்திராக்ஷம் வட நூற் பொருளை யொட்டிக் கண்மணியென மொழிபெயர்க்கப்பட்டது. ஓ(ம்) குரு, தீக்கை (தீக்ஷா) என்பனவும் தமிழ்ச் சொற்க ளாகவே தோன்றுகின் றன, ஓங்காரத்திற்கு இன்றும் தமிழ் வரிவடிவமே எழுதப்படுவதையும், உரு என்னும் சொல் போன்றே குரு என்னும் சொல்லும், வெப்பம், தோற்றம் சிவப்பு என்று பொருள் படுவதையும், தீக்கை என்பது குரு பருவான்மாவின் மலத்தைக் காண்டல் தீண்டல் முதலிய வற்றால் தீத்து (எரித்து) விடுதலைக் குறித்தலையும் நோக்குக, | ஓ-ஓங்காரம். ஒ. நோ. ரீ-ரீங்காரம், ஓ = அ + .. என்று வடமொழிப் புணர்ச்சிப்படி பிரித்தது பிற்காலம். ஆசிரியன் என்பதன் பொருளைத் தழுவி, குரு என்பதில், கு= குற்சிதம், ரு= ருத்திரன் என்று கூறுவது, News என்பது North Eest West South என்னும் நாற்றிசைச் செய்தி குறிப்பது என்று அப்பெயர்க்குக் காரணம் கூறுவது போன்றதே. | மதம்பற்றிய சில பொதுச்சொற்கள் மாயை மாய் ஐமாயை. ஓ. தோ, சாய்+ஐ= சாயை நிழல். மாய்+ அம் = மாயம். மாயை மாயம் என்பவை, அழிவு, மயக்கம் என்னும் பொருளன. ' மாயமாய்க் காணோம்' மாயவித்தை என்னும் வழக்குகளை நோக்குக. மாயை சாயை என்னும் தமிழ்ச்சொற்களை மாயா சாயா என்று கோர வீறாக்கினவனவானே வடசொல்லாகக் கூறுவது நகைப்பிற்சிடமானதே. மதந்தழுவிய சில கருத்துக்கள் வீடு : ஆன்மாவுக்குத் துன்பத்தை நீக்குவதும் நிலையான இருப்புமாகிய துறக்கவுலகைப் போல, பெயின்மழைத் துன்பத்தை விலக்குவதும் நிலையாகத் தங்கற் குரியது மானது என்னுங் கருத்தில், இல்லத்தை வீடென்றனர் முன்னோர்.