பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழகத்தின் தொன்மைக் குறிப்புக்கள்

௨௨௯

நக்க சாரணர் நயமிலர் தோன்றி... ஊனுடை யிவ்வுடம் புணவென் றெழுப்பலும்"

என்னும் மணிமேகலை (16 : 4- 59) யடிகளைக் காண்க:

தக்கம் - அம்மணம்,

சாவகம் முதலிய நாட்டிலுள்ளவர் நாகரிகராயிருந்தனர். நாக நாட்டின் ஒரு பகுதி இன்பத்திற்குச் சிறந்திருந்தமையால், அது தேவருலகாகக் கருதப்பட்டது. சாவகத்தின் பண்டைத் தலை தகரான நாகபுரத்திற்குப் போகவதிபுரம் என்றும் பெயருண்டு. மலேயத் தீவுக்கூட்டத்தில், சாவகம் பலி முதலிய தீவுகள் இன்றும் ஆடல் பாடலுக்கும் பிறவின் பங் கட்கும் சிறந்திருப்பது கவனிக்கத் தக்கது.

நடுமாகணத்தி (Central Provinces) லுள்ள முண்டரின் முன்னோர், கீழ்த்திசையிலிருந்த நாக நாட்டாரே. வங்காளக் குடாவிலிருந்த பல தீவுகள் அமிழ்ந்து போனபின், அவற்றினின் றும் எஞ்சினோர் இந்தியாவின் கீழ்ப்பாகங்களிற் குடியேறினர் என்க

முண்டரின் முன்னோர் நாகர் என்பதற்குச் சான்றுகள்

(1) சின்ன நாகபுரத்திலிருந்து மலேயத் தீவுக்குறை (Malayan Peninsula) வரையும், ஒரேவகையான கற்கருவிகள் அகப்படுவதுடன் பல பழக்கவழக்கங்களும் ஒத்திருக்கின்றன.[1]

(2) முண்டாமொழிகளும், நக்கவாரத் தீவுகளில் வழங்கும் மொழிகளும் மலேயத் தீவுக்குறையின் பழங்குடிகள் வழங்கும் மான் குமேர் (Mon - Khmer) மொழிகளும் ஓரின மென்று கொள்ளும்படி, பல முக்கியச் செய்திகளில் ஒத்திருக்கின்றன.[2]

மான்குமேர், முண்டா , திராவிடம் என்னும் முக் குடும்ப மொழிகளும் பின்வருபவற்றில் ஒத்திருக்கின்றன.

i; சொன் முதலில் ஒரு மெய்க்குமேல் வராமை

ii, சொல்லின் ஈற்றில் அரையொலிப்பு மெய்கள்.

iii. மூவிடப்பெயர்களிற் சில, பெயர்களுடன் சேர்ந்து

கிழமைப்பொருள் தரல்.


  1. 1. L. S. 1. Intro. p. 1.
  2. 2.L. S. 1. pp. 10, 15.