பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழகத்தின் தொன்மைக் குறிப்புக்கள்

௨௩௧

(6) தொடர்புப்பதிற்பெயர்களும் (Relative Pronouns) தொடர்பு வினையெச்சங்களும் இல்லாமை,

இவை தமிழுக்கும் உரியவாதல் காண்க.

மான்குமேர் மொழியினம் ஓரசை நிலை (Monosyllabic) யதாகவும், முண்டாமொழியினம் பல்லசை நிலை (Polysyllabic) யதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் முன்னதன் முன்மை யுணரப்படும்: |

ஆத்திரேலிய மொழிகட்கும் தமிழுக்கும் உள்ள ஒப்புமை.[1]

(1) சகர வேறுபாடுகளும் மூச்சொலிகளு மில்லாமை:

(2) பின்னொட்டுச் சொற்களாலேயே பெரும்பாலும் புதுச்சொற்கள் ஆக்கப்படல்,

(3) ஆத்திரேலிய மொழிகளில் உயர்திணைப் பெயர் களும் அஃறிணைப் பெயர்களும் வேறு படுக்கப் படாமை,

முதுபழந் தமிழிலும் இங்ஙனமே யிருந்தது.

கா : மண்வெட்டி, விறகு வெட்டி: சலிப்பான் (சல்லடை)

(4) 'அர்' பன்மை வீறாயிருத்தல்;

தமிழர், முண்டர், நாகர், ஆத்திரேலியர் என்பவர் பண்டு திரினத்தாராயிருந்ததாகத் தெரிகின்றது.

இலங்கையில் பண்டு வழங்கியது தமிழென்றும், ஈழ நாட்டரசர்க்கு முடிநாகர் என்ற பேர் இருந்ததென்றும், முத்துத்தம்பிப் பிள்ளையவர்கள் 'செந்தமிழ்'ச் சுவடிகை (Magazine) யில் எழுதியிருப்பது பொருத்தமானதே.

ஆத்திரேலியர் திராவிடரைப் பலவகையில் ஒத்திருப்பதாக மாத்தனூலார் கூறுகின்றனர்.


  1. 1.L S. 1. p. 14.

ஒ.மொ .—20