பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௨௩௨

ஒப்பியன் மொழி நூல்

தமிழர் நீக்கிரோவர்க்கும் ஆரியர்க்கும் இடைப்பட்டோராதல்

இதற்குச் சான்றுகள் :

(1) கடாரத்தில் முதன் முதல் இராக்கதர் (Monsters) வாழ்ந்தனர் என்னும் ஒரு வழக்குண்மையாலும், நக்கவாரத்தில் நரவூனுண்ணிகனிருந்தமை மணிமேகலையிற் கூறப்படுவதாலும், இலங்கைக்குத் தெற்கே அசுரர் என்னும் ஓர் இராக்கத வகுப்பாரிருத்தமை கந்தபுராணத்தாலறியப்படுவதாலும், தென்மேற்குத் திசைத்தலைவனாக நிருதியென்றோர் அரக்கன் குறிக்கப்படுவதாலும், இன்றும் தென்மேற்கிலுள்ள ஆப்பிரீக்கர் அரக்கவினமாயிருப்பதாலும், பண்டு தமிழகத்தின் கிழக்கிலும் தெற்கிலும் மேற்கிலும் மாந்தனின் 2 ஆவது நிலையினரான நீக்கிரோவர் வாழ்ந்தனர் என்பது அறியப்படும். இராக்கதர் இரவில் செல்லுபவர், இதையே நிசாசரர் என்று மொழி பெயர்த்துக்கொண்டனர் ஆரியர். அரக்கர் அழிப்பவர்.

(3) உடலமைப்புப்பற்றிய மாந்தன் நிலைகளுள், முதலாவது விலங்கு போல்வது; இரண்டாவது பண்டை நீக்கிரோவரது; மூன்றாவது திராவிடரது, நாலாவது ஆரியரது.

தமிழர் உடலமைப்பில் ஒரு வலத்த கருநீசிய(Melanesian) அல்லது இந்தோ-ஆப்பிரிக்கக் கூறுள்ளதாகப் பண்டிதர் லோகன் (Dr. Logan) கூறுகின்றார்.[1]

மாந்தன் நிலைகள், தொழிற்படி, முறையே உண்ணும் மாந்தன் {Man the Eater) உழைக்கும் மாத்தன் (Man the Worker), எண்ணும் மாந்தன் (Man the Thinker) புதுப்புனை மாந்தன் (Man the Inventor) என நான்கு. அவற்றுள் இடை மூன்றும் திராவிடர் அடைந்தவை; இறுதியது ஆரியரது.

மாந்தனை நிறம்பற்றிக் காலமுறைப்படி முறையே கருமாந்தன், செங்கருமாந்தன், செம்மாந்தன், பொன்மாந்தன், வெண்மாந்தன் என ஐவகையாக வகுக்கலாம். அவற்றுள் முதல் மூன்று நிறங்கள் திராவிடருடையன.

மாந்தன் மூக்கு முதலிலிருந்து வரவர ஒடுங்கி வந்திருக்கின்றது. நீக்கிரோவர் மூக்கு அகன்றும் திராவிடரது நடு நிகர்த்தாயும், ஆரியரது ஒடுங்கியு மிருக்கும், -


  1. 1.L, S.I.p.14. t Caldwell's Comparative Grammar pp. 560. 561.